பொங்கலுக்கு 1.78 கோடி பேருக்கு வேட்டி, சேலை: அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம்
பொங்கல் பண்டிகையையொட்டி 1.78 கோடி பேருக்கு விலையில்லா வேட்டி, சேலை வழங்கப்பட்டு வருகிறது என்று வருவாய்த்துறை அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் கூறினார்.


பொங்கல் பண்டிகையையொட்டி 1.78 கோடி பேருக்கு விலையில்லா வேட்டி, சேலை வழங்கப்பட்டு வருகிறது என்று வருவாய்த்துறை அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் கூறினார்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் விலையில்லா வேட்டி, சேலைகள் மற்றும் பொங்கல் பொருள்களை வழங்கி அவர் பேசியது:
நடப்பு ஆண்டில் பொங்கல் பண்டிகைக்கு தமிழகம் முழுவதும் 1 கோடியே 78 லட்சம் பயனாளிகளுக்கு விலையில்லா வேட்டி சேலைகளை வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதேபோல ரேஷன் அட்டை உள்ளவர்களுக்கு பொங்கல் பொருள்கள் வழங்கும் பணியில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இவற்றை பொதுமக்கள் பெறும்போது எவ்வித சிரமமும் இன்றி பெறுவதற்காக உரிய நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை அனைவரும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.
மாநிலம் முழுவதும் 1 கோடியே 84 லட்சம் பயனாளிகளுக்கு பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ வெல்லம், ரூ.100 ரொக்கம் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகம் எல்லா துறைகளிலும் முன்னேற்றம் அடைந்து அனைத்து மாநிலங்களுக்கும் தமிழகம் ஒரு முன்னோடி மாநிலமாக, முதன்மை மாநிலமாக திகழ வேண்டும் என்பதற்காக முதல்வர் ஜெயலலிதா தீவிரமாக பாடுபட்டு வருகிறார்.
தமிழகம் தன்னிறைவு பெற வேண்டும் என்பதற்காக தொலைநோக்கு சிந்தனையோடு தொலைநோக்கு திட்டம்-2023 என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
ஏழை மக்கள் வாழ்வில் ஏற்றம் பெற வேண்டும் என்பதற்காக விலையில்லா ஆடுகள் மற்றும் மாடுகள் வழங்கும் திட்டம், 60-வயதைக்கடந்த முதியோர்களுக்கும், ஆதரவற்றோர்களுக்கும், விதவைத் தாய்மார்களுக்கும் மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கும் திட்டம் உள்ளிட்டவை செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
தமிழகம் முழுவதும் 30 லட்சம் நபர்கள் மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகையாக பெற்று வருகின்றனர். இத்திட்டத்திற்கு ஆண்டுக்கு ரூ.3,600 கோடி ஒதுக்கீடு செய்து வழங்கியுள்ளார்கள். கல்வித்துறையில் தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்ற கல்வித்துறைக்கு ரூ.15,000 கோடி நிதியை முதல்வர் ஒதுக்கியுள்ளார்.
ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு பட்டம் பயின்றிருந்தால் ரூ.50,000-ம், 12-ஆம் வகுப்பு வரை பயின்றிருந்தால் ரூ.25,000-ம் நிதி உதவியுடன் திருமாங்கல்யத்துக்கு 4 கிராம் தங்கமும் வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் இந்த திட்டங்களை பயன்படுத்தி அடுத்தகட்டத்துக்கு முன்னேற வேண்டும் என்றார்.
பெருந்துறை சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட மடத்துப்பாளையம் ஊராட்சி, தோரணவாவி, வெட்டையன்கிணறு, திங்களூர், பாப்பம்பாளையம், போலநாயக்கன்பாளையம், செல்லப்பம்பாளையம், கல்லாகுளம், கருக்குப்பாளையம், நிச்சாம்பாளையம், பாண்டியம்பாளையம், சிங்காநல்லூர் ஆகிய 12 ஊராட்சிகள், நல்லாம்பட்டி பேரூராட்சி, பெத்தாம்பாளையம் பேரூராட்சி, பள்ளபாளையம் பேரூராட்சி, காஞ்சிகோயில் பேரூராட்சிகள் மற்றும் பல்வேறு இடங்களில் விலையில்லா வேட்டி, சேலைகள், பொங்கல் பொருள்களை அவர் வழங்கினார்.
விழாவில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் வே.க.சண்முகம், மாவட்ட வருவாய் அலுவலர் சு.கணேஷ், கோட்டாட்சியர் ஆர்.சுகுமார், தொகுதி செயலர் திங்களூர் எஸ்.கந்தசாமி, பெருந்துறை ஒன்றியக்குழுத் தலைவர் எஸ்.பெரியசாமி, துணைத்தலைவர் விஜயன் (எ) ராமசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...