சிதம்பரம் அருகே வீட்டின் பின்புறக்கதவை உடைத்து 25 பவுன் நகைகள், ரூ.25 ஆயிரம் ரொக்கம் திருட்டு
சிதம்பரம் அருகே உள்ள பி.முட்லூரில் வசிப்பவர் முகமதுஅலி அயூப்கான் (44). இவர் வெளிநாட்டில் வேலைபார்க்கிறார். இந்நிலையில் அவரது மனைவி ரஹமத்துன்னிசா


சிதம்பரம் அருகே வீட்டின் பின்புறக்கதவை உடைத்து மர்ம ஆசாமிகள் உள்ளே புகுந்து 20 பவுன் நகைகள் மற்றும் ரொக்கம் ரூ.10 ஆயிரத்தை திருடிச் சென்றனர்.
சிதம்பரம் அருகே உள்ள பி.முட்லூரில் வசிப்பவர் முகமதுஅலி அயூப்கான் (44). இவர் வெளிநாட்டில் வேலைபார்க்கிறார். இந்நிலையில் அவரது மனைவி ரஹமத்துன்னிசா நேற்று(வியாழக்கிழமை) இரவு தனியாக இருப்பதற்கு பயந்து வீட்டை பூட்டிக் கொண்டு அருகாமையில் உள்ள தாயார் வீட்டில் தங்கியுள்ளார். இந்நிலையில் இன்று காலை வீட்டிற்கு வந்த போது வீட்டின் பின்புறக்கதவை உடைத்து மர்மஆசாமிகள் உள்ளே புகுந்து 25 பவுன் தங்க நகைகள் மற்றும் ரொக்கம் ரூ.25 ஆயிரத்தை திருடிச் சென்றது தெரியவந்து அதிர்ச்சியுற்றார். இதுகுறித்து புகாரின் பேரில் பரங்கிப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். கடலூரிலிருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...