திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே சூரியூர் ஜல்லிக்கட்டுப் போட்டி இன்று நடைபெற்றது. உச்ச நீதிமன்ற வழிகாட்டு நெறிமுறைகளின்படி நடத்தப்பட்டது இந்தப் போட்டி.
இதில் 28 மாடு பிடி வீரர்கள் காயம் அடைந்தனர். அவர்களில் படுகாயம் அடைந்த 5 பேர் திருச்சி அரசுப் பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
சூரியூர் கிராமத்தில் ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கல் தினத்தன்று ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு, மாட்டுப்பொங்கலான செவ்வாய்க்கிழமை இன்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது.
இது மாநிலத்திலேயே ஆண்டு தொடக்கத்தில் நடைபெறும் முதல் ஜல்லிக்கட்டு விழா. உச்ச நீதிமன்ற உத்தரவு, மாவட்ட நிர்வாகம் வழிக்காட்டுதலின்படி நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டில் திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், கும்பகோணம், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சுமார் 500-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.
இந்தக் காளைகள் அனைத்தும் மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகே ஜல்லிக்கட்டில் பங்கேற்றன. மேலும், இவற்றைப் பிடிக்கும் இளைஞர்களுக்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பிறகே அனுமதிக்கப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ராமதாஸ் பாமகவின் 30 வேட்பாளர்களுக்கு சிலிண்டர் சின்னம்!

இம்பாக்ட் வீரர் விதி இளம் வீரர்களுக்கான பொன்னான வாய்ப்பு: பிரப்சிம்ரன் சிங்

களைகட்டிய புதுச்சேரி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு!

எரிவாயு இறக்குமதி? கத்தார் சென்றார் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர்!
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


