சாத்தூர் அருகே அரசு மணல் குவாரியில் மணல் சரிந்து ஒருவர் பலியானார். இருவர் காயமடைந்தனர்.
சாத்தூர் அருகே உள்ள பந்துவார்பட்டி கிராமத்தில் உள்ள வைப்பாற்றில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரசு மணல் குவாரி திறக்கப்பட்டது. இந்த மணல் குவாரியில் வைப்பாற்றில் மணல் அள்ளியது போக சுற்றியுள்ள பட்டா நிலங்களில் மணல் அள்ளுவதாக பொது மக்கள் புகார் தெரிவித்தனர். அதிகாரிகளிடம் பல முறை தெரியப்படுத்தியும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில், பட்டா நிலங்களில் மணல் அள்ளும் பணி இன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது சங்கரன்கோயில் அருகே உள்ள சின்னகோவிலாங்குளத்தைச் சேர்ந்த முத்துராமலிங்கம் (31), மற்றும் மேலும் இருவர் மணல் அள்ளும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது மணல் சரிந்து முத்துராமலிங்கம் மணலில் புதைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் இருவர் காயமடைந்து சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து வெம்பக்கோட்டை போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை பங்குச் சந்தைக்கு விடுமுறை அறிவிப்பு!

ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சு; ஆதிக்கம் தொடருமா?

டிரம்ப்புடன் விவாதிக்க விருப்பமில்லை: போப் லியோ

ஈரான் மீதான கடற்படை முற்றுகையை ஆதரிக்கும் இஸ்ரேல்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

