சிதம்பரம் நடராஜர் கோயிலில் சுற்றுலா பயணியிடம் 11 பவுன் தாலி செயின் பறிப்பு
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுக்கா காந்தப்பாளையத்தைச் சேர்ந்த சுப்பராயன். இவர் தனது தம்பி மூர்த்தியின் 60வது பிறந்தநாளை முன்னிட்டு குடும்பத்துடன்


சிதம்பரம் ஸ்ரீநடராஜர்கோயில் திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து வந்த பெண்ணிடம் 11 பவுன் தாலி செயின் மர்ம ஆசாமிகளால் பறிக்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுக்கா காந்தப்பாளையத்தைச் சேர்ந்த சுப்பராயன். இவர் தனது தம்பி மூர்த்தியின் 60வது பிறந்தநாளை முன்னிட்டு குடும்பத்துடன் திருக்கடையூர் கோயிலுக்கு சென்று சிதம்பரம் வழியாக திரும்பினர். அப்போது சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலுக்கு சென்று சாமி கும்பிட்டனர். தில்லைக்கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி அருகே சுப்பராயன் மனைவி சுந்தரியின் (65) 11 பவுன் தாலிச்செயினை மர்மஆசாமிகள் பறித்துச் சென்றனர். இதுகுறித்து சுப்பராயன் சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...