சிதம்பரம் அருகே வீராணம் ஏரிக்கரையில் இளைஞர் மர்மசாவு
சிதம்பரம் அருகே வீராணம் ஏரிக்கரையோரம் உள்ள வெய்யலூர் கிராமத்தில் 24 வயது இளைஞர் ஒருவர் வயலில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். உடலை


சிதம்பரம் அருகே வீராணம் ஏரிக்கரையோரம் உள்ள வெய்யலூர் கிராமத்தில் 24 வயது இளைஞர் ஒருவர் வயலில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். உடலை சேத்தியாத்தோப்பு போலீஸார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே வீராணம் ஏரிக்கரையோரம் உள்ள வாழைக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த சின்னதுரை மகன் ஷரீஷ் (28). விவசாய வேலை செய்து வரும் இவர் இன்று காலை சைக்கிளில் வயலுக்கு செல்வதாக கூறி வீட்டிலிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இந்நிலையில் பிற்பகல் ஏரிக்கரையில் உள்ள வெய்யலூர் எனுமிடத்தில் வயலில் ஆணுறுப்பு சிதைந்த நிலையில் மர்மான முறையில் இறந்து கிடந்தார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சேத்தியாத்தோப்பு போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சேத்தியாத்தோப்பு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...