வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

விவசாயிகள் தற்கொலை இல்லை என தெரிவித்த தமிழகஅரசுக்கு உழவர் முன்னணி கண்டனம்

வறட்சியால் தமிழகத்தில் விவசாயிகள் யாரும் தற்கொலை செய்து கொள்ளவில்லை. உடல் நலக்கோளாறினாலும், குடும்ப பிரச்சனையினாலும் தற்கொலை செய்து கொண்டனர் என

News image
Updated On :23 ஜனவரி 2013, 10:49 am

G.Sundararaj

வறட்சியால் தமிழகத்தில் விவசாயிகள் யாரும் தற்கொலை செய்து கொள்ளவில்லை. உடல் நலக்கோளாறினாலும், குடும்ப பிரச்சனையினாலும் தற்கொலை செய்து கொண்டனர் என தமிழகஅரசு வருவாய்த்துறை துணைச் செயலாளர் உயர்நீதிமன்றத்தில் கூறியுள்ளது அரசின் நிலைப்பட்டிற்கு எதிராக உள்ளது என தமிழக உழவர் முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உழவர் முன்னணி செயலாளர் சி.ஆறுமுகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்: காவிரி நீர் வராததால் குறுவை சாகுபடியை இழம்தும், சம்பா சாகுபடிக்கு நீர் இல்லாததால் வயல்கள் வெடித்து பாதிக்கப்பட்டுள்ளதை கண்டறிய அமைச்சர்கள் குழுவை தமிழகஅரசு அனுப்பியுள்ளதையும், புனல் மின்சாரம் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதையும் காரணம் காட்டி கர்நாடக அரசின் மீது பயிர் இழப்பீடு கோரி தமிழகஅரசு சிவில் வழக்கு தொடுத்துள்ளது. விவசாயிகள் கடும் இழப்பை சந்தித்துள்ளது என்பதை தமிழக அரசே ஏற்று இழப்பை முழுமையாக ஈடு செய்வதாகவும், விவசாயிகள் தற்கொலை முயற்சியில் ஈடுபட வேண்டாம் என தமிழக முதல்வர் வேண்டுகோள் விடுத்தார். இந்நிலையில் வருவாய்த்துறை செயலர் உயர்நீதிமன்றத்தில் தமிழகத்தில் விவசாயிகள் வறட்சியால் தற்கொலை செய்து கொள்ளவில்லை எனக்கூறியது தமிழகஅரசு நிலைப்பாட்டிற்கு எதிராக உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.