வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

சிதம்பரம் மெளனகுருசாமி மடத்தில் 42 பவுன் நகைகள் மற்றும் ரூ.15ஆயிரம் திருட்டு

சிதம்பரம் சபாநாயகர்தெருவில் உதவி போலீஸ் சூப்ரண்டன்ட் அலுவலகத்தில் எதிரில் மெளனகுருசாமி மடம் உள்ளது. மடத்தின் அதிபதியான மெளன சுந்தரமூர்த்தி சுவாமிகள்  நேற்று(வியாழக்கிழமை) மாலை வடலூர் ராமலிங்க அடிகளார் நிலையத்திற்கு சென்றார். இன்று(வெள்ளிக்கிழமை) காலை திரும்பி வந்து

News image
Updated On :25 ஜனவரி 2013, 2:06 pm

G.Sundararaj

சிதம்பரம் உதவி போலீஸ் சூப்ரண்டன்ட் அலுவலகத்தின் எதிரில் உள்ள மெளனகுருசாமி மடத்தின் கதவை உடைத்து 42 பவுன் நகைகள், வெள்ளி பொருள்கள் மற்றும் ரூ.15ஆயிரம் ரொக்கம் திருடு போனது.

சிதம்பரம் சபாநாயகர்தெருவில் உதவி போலீஸ் சூப்ரண்டன்ட் அலுவலகத்தில் எதிரில் மெளனகுருசாமி மடம் உள்ளது. மடத்தின் அதிபதியான மெளன சுந்தரமூர்த்தி சுவாமிகள்  நேற்று(வியாழக்கிழமை) மாலை வடலூர் ராமலிங்க அடிகளார் நிலையத்திற்கு சென்றார். இன்று(வெள்ளிக்கிழமை) காலை திரும்பி வந்து பார்த்த போது மடத்தின் கதவை உடைத்து மர்மஆசாமிகள் உள்ளே புகுந்து பீரோவிலிருந்த 30 பவுன் வீரசைவர்கள் கழுத்தில் அணியும் செச்சையுடன் கூடிய செயின், நாலரை பவுன் முறுக்கு செயின்,  ஐந்தேகால் பவுன் ருத்ராட்ச மாலை, இரண்டு 1 கிராம் தங்க காசுகள், வெள்ளி இடம்புரிசங்கு, வெள்ளி சொம்பு மற்றும் ரொக்கம் ரூ.15 ஆகியவை திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்து சுந்தரமூர்த்தி சுவாமிகள் சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.