கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள காவிரி டெல்டா பகுதியின் கடை, மடை பகுதியான பிச்சவாரம், கீழச்சாவடி, மேலசாவடி, கிள்ளை உட்பட 30 மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் பயிரிட்டுள்ள சம்பா நெற்பயிர்கள் பயிர்கள் தண்ணீர் இன்றி நெற்கதிர் வரும் தருவாயில், பயிர்கள் கருகி வருவதால், கீழணையிலிருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று விவசாயிகள் சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகளை சந்தித்து கோரியுள்ளனர். தண்ணிர் திறக்க முடியாது என்றும், தண்ணீரை தேக்கி வைக்க அரது உத்திரவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் விவசாயிகளிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.