வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

அனுமதியின்றி விற்பனைக்கு வைத்திருந்த மதுபாட்டில்கள் பறிமுதல்: இருவர் கைது

மீலாதுநபி, குடியரசுதினம், வடலூர் தைப்பூசம் ஆகியவற்றை முன்னிட்டு ஜன.25,26,27 ஆகிய 3 தினங்கள் கடலூர் மாவட்டத்தில் மதுபானக்கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்நிலையில் அனுமதியின்றி விற்பனைக்காக சிதம்பரம் அருகே செட்டிமேடு சர்ஜன்ராஜ்சேட் தோப்பு பங்களா மோட்டார் கொட்டகையில் டாஸ்மாக்

News image
Updated On :27 ஜனவரி 2013, 1:24 pm

G.Sundararaj

சிதம்பரம் அருகே அனுமதியின்றி விற்பனைக்காக வைத்திருந்த மதுபாட்டில்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக இருவரை கைது செய்தனர்.

மீலாதுநபி, குடியரசுதினம், வடலூர் தைப்பூசம் ஆகியவற்றை முன்னிட்டு ஜன.25,26,27 ஆகிய 3 தினங்கள் கடலூர் மாவட்டத்தில் மதுபானக்கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்நிலையில் அனுமதியின்றி விற்பனைக்காக சிதம்பரம் அருகே செட்டிமேடு சர்ஜன்ராஜ்சேட் தோப்பு பங்களா மோட்டார் கொட்டகையில் டாஸ்மாக் கடைகளில் இருந்து வாங்கி வந்து மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருப்பதாக போலீஸாருக்கு தகவல் வந்தது.

தகவல் அறிந்த சிதம்பரம் தாலுக்கா போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்தி மற்றும் போலீஸார் அங்கு சென்று பதுக்கி வைக்கப்பட்டிருந்த 754 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக விற்பனைக்காக பாட்டில்களை வைத்திருந்த செட்டிமேடு கிராமத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம் (54), பாண்டியன் (45) ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.