தைப்பூசமான இன்று ஸ்ரீநடராஜப் பெருமான் திருநடனம் புரிந்ததை முன்னிட்டு சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பிற்பகல் மூன்றரை மணிக்கு ஸ்ரீநடராஜப் பெருமான் வீற்றுள்ள சித்சபை திறக்கப்பட்டது.ஸ்ரீநடராஜர் கோயிலில் பஞ்சமூர்த்திகள் மற்றும் ஸ்ரீபதஞ்சலி, ஸ்ரீவியாக்ரபாதர், ஸ்ரீஜைமுனி ஆகிய மூவரும் வீதி வலம் வந்தனர். பின்னர் தைபூசத்தை முன்னிட்டு சிவகங்கையில் தீர்த்தவாரி நடைபெற்றது. பஞ்சமூர்த்திகள் சிவகங்கை மண்டபத்தில் எழுந்தருளினர். சிவகங்கையில் பொதுதீட்சிதர்களால் ஸ்ரீஅஸ்தரராஜர் நீரில் மூழ்கி தீர்த்தவாரி காட்சியளித்தார்.அதன் பின்னர் ஸ்ரீபதஞ்சலி, ஸ்ரீவியாக்ரபாதர், ஸ்ரீஜைமுனி ஆகியோருக்கு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பிற்பகல் மூன்றரை மணிக்கு சித்சபை திறக்கப்பட்டு ஸ்ரீபதஞ்சலி, ஸ்ரீவியாக்ரபாதர், ஸ்ரீஜைமுனி ஆகிய மூவரும் சித்சபையில் எழுந்தருளிய பின்னர் ஸ்ரீநடராஜப்பெருமான் காட்சியளித்தார். ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்திக்கு சிறப்பு தீபாராதனை செய்யப்பட்டு கோதுமையினால் செய்யப்பட்ட இனிப்பு நிவேத்தியம் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று இரவு பஞ்சமூர்த்திகள் வீதிஉலா நிகழ்ச்சி நடைபெற்றது.