பாமக சாதி அரசியலை கைவிட வேண்டும்: ஜி.ராமகிருஷ்ணன் வேண்டுகோள்
சிதம்பரம் காந்திசிலை அருகே மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி நிதியளிப்பு மற்றும் அரசியல் விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. நகரச் செயலாளர் ஆர்.ராமச்சந்திரன் தலைமை வகித்தார். கூட்டத்தில் மாநிலச்


சாதி மோதலை உருவாக்கி இழந்த செல்வாக்கை மீண்டும் பெற பாமக முயற்சி மேற்கொண்டுள்ளது. எனவே பாட்டாளி மக்கள் கட்சி சாதி அரசியலை கைவிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சிதம்பரம் காந்திசிலை அருகே மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி நிதியளிப்பு மற்றும் அரசியல் விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. நகரச் செயலாளர் ஆர்.ராமச்சந்திரன் தலைமை வகித்தார். கூட்டத்தில் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் பங்கேற்று பேசியதாவது: பாமகவினர் எங்களது தலைவர் கே.பாலகிருஷ்ணனை கடுமையாக விமரிசிப்பதோ, கொடும்பாவி கட்டி எரிப்பதோ, தாக்குவதற்கு முயற்சிப்பதோ செய்தால், அந்த வன்முறையை எதிர்கொள்ளக்கூடிய திறமை, சக்தி எங்களுக்கு இருக்கிறது. சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடு, டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகளில் மத்திய அரசில் அங்கம் வகிககும் திமுக தமிழகத்தில் உள்ள மக்களுக்கு துரோகம் இழைத்து வருகிறது.
கருணாநிதிக்கு தமிழக மக்கள் நலனில் அக்கரை இல்லை என சொல்லும் போது அவருக்கு எங்கள் மீது ஆத்திரம் வருகிறது. அதனை திசை, திருப்ப எதை, எதையோ கருணாநிதி பேசி வருகிறார். காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை. திருவாரூர் மாவட்டங்களில் சுமார் 14 லட்சம் ஏக்கர் நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள சம்பா நெல்பயிர் கருகி அழிந்துவிட்டது. நிவாரணம் கோரி நாங்கள் முற்றுகை போராட்டம் நடத்தினோம். ஆனால் தமிழகஅரசு மெளனம் சாதித்து வருகிறது. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக நிர்வாகம் ஆள்குறைப்போ, ஊழியர் குறைப்போ செய்ய மாட்டோம் என அறிவித்துவிட்டு, தற்போது பொங்கல் போனஸ், அகவிலைப்படி நிலுவைத்தொகை, இன்கிரிமெண்ட் உள்ளிட்ட பணப்பயன்களை நிறுத்தி உள்ளது. நிர்வாகத்தின் தூண்டுதலின் பேரில் போராட்டக்குழுவினர் மீது சிதம்பரம் காவல்துறையினர் ஜாமினில் வெளிவர முடியாத பொய் வழக்கு போட்டுள்ளது. அந்த வழக்கை வாபஸ் பெறாவிடில் மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி மீண்டும் போராட்டத்தில் ஈடுபடும். கடந்த காலங்களில் பல வல்லுநர்களை, விஞ்ஞானிகளை, அரசியல் தலைவர்களை உருவாக்கிய இப்பல்கலைக்கழகம் மிக மோசமான நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது. நிர்வாகம் அதனை சீர்படுத்தவில்லையென்றால், பல்கலைக்கழகத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்து போராடுவோம் என எச்சரிக்கிறோம் எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...