அண்ணாமலைநகர் காவல் நிலையத்திற்குள் புகுந்த நல்லபாம்பு
சிதம்பரம் அண்ணாமலைநகர் காவல் நிலையத்தின் வெளியே விநாயகர் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு வருகிற பிப்.1-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு


சிதம்பரம் அண்ணாமலைநகர் காவல் நிலையத்திற்குள் புகுந்த நல்ல பாம்பை தீயணைப்பு மீட்புத்துறையினர் பிடித்து காட்டுப் பகுதியில் கொண்டு விட்டனர்.
சிதம்பரம் அண்ணாமலைநகர் காவல் நிலையத்தின் வெளியே விநாயகர் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு வருகிற பிப்.1-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு காவல் நிலையத்தை சுத்தம் செய்யும் பணியில் போலீஸார் ஈடுபட்டனர். அப்போது கோப்புகள் வைக்கப்பட்டிருந்த அறையில் 6 அடி நீள நல்ல பாம்பு இருப்பதை போலீஸார் கண்டு அதிர்ச்சியுற்றனர். உடனே போலீஸார் தீயணைப்பு மீட்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சிதம்பரம் தீயணைப்பு மீட்புத்துறையினர் விரைந்து வந்து 6 அடி நீள நல்ல பாம்பை பிடித்து அருகாமையில் உள்ள காட்டுப் பகுதியில் கொண்டு விட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...