சிதம்பரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1.70லட்சம் மற்றும் 7 பவுன் நகை திருட்டு
சிதம்பரம் காயத்திரி அம்மன் கோயில் தெரு கீழவீதியில் ஜார்கண்ட மாநிலத்தைச் சேர்ந்த சுதிர்சர்மா (29) என்பவர் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர். இவர் 10 நபர்களுடன்


சிதம்பரத்தில் வீட்டின் வெளிக்கதவு பூட்டை உடைத்து மர்மஆசாமிகள் உள்ளே புகுந்து ரூ.1.70 லட்சம் ரொக்கம், 7 பவுன் நகைகள் திருடு போனது.
சிதம்பரம் காயத்திரி அம்மன் கோயில் தெரு கீழவீதியில் ஜார்கண்ட மாநிலத்தைச் சேர்ந்த சுதிர்சர்மா (29) என்பவர் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர். இவர் 10 நபர்களுடன் சிதம்பரத்தில் வீட்டு உள்பகுதியில் அலங்கார பொருள்கள் பொருத்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் நேற்று (புதன்கிழமை) மாலை பணி முடித்து வீட்டிற்கு திரும்பிய போது வீட்டின் வெளிக்கதவு பூட்டை உடைத்து மர்மஆசாமிகள் உள்ளே புகுந்து பீரோவிலிருந்து ரூ.1.70 லட்சம் ரொக்கம், செயின், பிரேஸ்லெட், மோதிரம் உள்ளிட்ட 7 பவுன் நகைகளை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து புகாரின் பேரில் நகர குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். கடலூரிலிருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகளை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...