மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

சிதம்பரம் அருகே குடிநீர் கோரி சாலைமறியல்: போக்குவரத்து பாதிப்பு

சிதம்பரம் அருகே குடிநீர் கோரி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் சிதம்பரம்-காட்டுமன்னார் கோயில் சாலையில் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

News image
Updated On :1 ஜூலை 2013, 7:12 am

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் அருகே குடிநீர் கோரி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் சிதம்பரம்-காட்டுமன்னார் கோயில் சாலையில் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சிதம்பரம் அருகே உள்ள வக்காரமாரி கிராமத்தில் கடந்த 6 மாத காலமாக குடிநீர் உப்புநீராக வருவதால் குடிக்க லாயக்கற்ற நிலையில் உள்ளதாகவும், வேறு போர்வெல் அமைத்து நல்ல குடிநீர் வழங்க வேண்டும் என வலியுறுத்தி கிராமத்தலைவர் ஆறுமுகம் தலைமையில் அப்பகுதி 100 பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் காலிகுடங்களுடன் திங்கள்கிழமை காலை சாலைமறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.முருகானந்தம் மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி உரிய அதிகாரிகளிடம் தெரிவித்து தக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததை அடுத்து மறியலை பொதுமக்கள் வாபஸ் பெற்றனர். இதனால் சிதம்பரம்- காட்டுமன்னார்கோயில் சாலையில் சுமார் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.