கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய இளைஞர் குண்டர் சட்டத்தில் கைது

மதுரை சிந்தாமணி, புதுத்தெருவைச் சேர்ந்த ராஜய்யா என்பவரின் மகன் டூல்ஸ் பாண்டி(29). இவர் மீது மதுரை கரிமேடு, விருதுநகர் கிழக்கு, மேற்கு காவல் நிலையங்கள், பாண்டியன் நகர், சூலக்கரை உள்ளிட்ட பல்வேறு

Updated On :1 ஜூலை 2013, 1:24 pm

தனியாக நடந்து சென்ற பெண்களிடம் வழிமறித்து கத்தியைக் காட்சி நகைகளை வழிப்பறி செய்தது உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடைய இளைஞரை கைது செய்து போலீஸார் சிறையின் அடைத்தனர்.

மதுரை சிந்தாமணி, புதுத்தெருவைச் சேர்ந்த ராஜய்யா என்பவரின் மகன் டூல்ஸ் பாண்டி(29). இவர் மீது மதுரை கரிமேடு, விருதுநகர் கிழக்கு, மேற்கு காவல் நிலையங்கள், பாண்டியன் நகர், சூலக்கரை உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் பெண்களை வழிமறித்து நகைகளை வழிப்பறி செய்தது, கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பாக 8 வழக்குகள் வரையில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் ஜூன்-22ம் தேதி வாகன தணிக்கையின் போது இரவில் பிடிபட்டார். அப்போது விசாரித்ததில் குறிப்பிட்ட வழக்குகளில் தொடர்புடையவர் என்பது விசாரணையில் தெரியவந்தது. அவர் அளித்த தகவலின் பேரில் அவரது வீடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வைத்திருந்த 29 சவரன் நகையையும் பறிமுதல் செய்தனர்.

இந்த நிலையில் இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் மாவட்ட காவல் நிலைய கண்காணிப்பாளர் மகேஸ்வரனுக்கு மேல் நடவடிக்கைக்கு பரிந்துரைத்தனர். பின்னர் அவர் மாவட்ட ஆட்சியர் டி.என்.ஹரிஹரனுக்கு பரிந்துரை செய்ததன் பேரில் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன் பேரில் போலீஸார் கைது செய்து மதுரை மத்திய சிறையில் இன்று அடைக்கப்பட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.