சேலத்தில் வழக்குரைஞர் கடத்தல்
சேலத்தில் நேற்று ஜெயபால் என்ற வழக்குரைஞர் தனது வீட்டுக்கு இரவு வந்தாராம். ஆனால் வீட்டின் அருகில் அவரது காலணிகளும், வழக்குக் கட்டுகளும் மட்டுமே இருந்துள்ளன.


சேலத்தில் வழக்குரைஞர் ஒருவர் கடத்தப்பட்டுள்ளார்.
சேலத்தில் நேற்று ஜெயபால் என்ற வழக்குரைஞர் தனது வீட்டுக்கு இரவு வந்தாராம். ஆனால் வீட்டின் அருகில் அவரது காலணிகளும், வழக்குக் கட்டுகளும் மட்டுமே இருந்துள்ளன. திடீரென அவர் காணாமல் போனதாகக் கூறப்பட்டது. பின்னர் இன்று காலை அவரது வீட்டுக்கு தொடர்பு கொண்ட நபர்கள், ஜெயபால் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ளதாகக் கூறியுள்ளனர். இது குறித்து குடும்பத்தினர் போலீஸில் புகார் அளித்தனர். இதன் பேரில் அஸ்தம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...