இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

பாபநாசம் மலையில் வெடி மருந்து, குரங்கு தோல் பறிமுதல்: இருவர் கைது

திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் மலையில் தனியார் தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்த வெடி மருந்து, குரங்குத் தோல், செந்தூர் மரக்கட்டை ஆகியன பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர்.

News image
Updated On :11 ஜூலை 2013, 11:44 am

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் மலையில் தனியார் தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்த வெடி மருந்து, குரங்குத் தோல், செந்தூர் மரக்கட்டை ஆகியன பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர்.

பாபநாசம் காரையார் வனப்பகுதியில் கட்டளைமலை தனியார் தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் அனுமதியின்றி வெடி மருந்து உள்ளிட்டவை வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அம்பாசமுத்திரம் புலிகள் காப்பக துணை இயக்குநர் சி. குருசாமி, முண்டன்துறை சரக வனச்சரகர் ஜெபாஸ் உள்ளிட்டோர் புதன்கிழமை அங்கு சோதனை மேற்கொண்டனர்.

இதில் ஒரு கிலோ வெடி மருந்து, அரை கிலோ குருணை பூச்சி மருந்து, 5 மீட்டர் நீளமுள்ள வெடி மருந்து பயன்படுத்தி வெடிக்க செய்யும் வயர், கருங்குரங்கு தோல்,  10 செந்தூர் மரக்கட்டைத் துண்டுகளும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

அங்கு பணியில் இருந்த தொழிலாளர்கள் சிவந்திபுரம் அருகே ஆறுமுகம்பட்டியை சேர்ந்த செல்வராஜ் (65), அம்பாசமுத்திரம் அருகே சிங்கம்பட்டியை சேர்ந்த சங்கரராஜகோபால் மகன் சொக்கலிங்கம் (34) ஆகியோரை வனத்துறையினர் கைது செய்தனர். மேலும் தோட்ட உரிமையாளர் வசந்தி, சமையல் மாஸ்டர் மாதேஷ் ஆகியோர் மீது வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.