சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! 1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்!
/

மத்தியச் சிறையில் சிறைத் துறை டிஐஜி திடீர் ஆய்வு: 2 செல்போன்கள் பறிமுதல்

வேலூர் மத்தியச் சிறையில் கடந்த இரு ஆண்டுகளாக தொடர்ந்து செல்போன்கள், கஞ்சா ஆகியன கைப்பற்று வருவது அதிகரித்துள்ளது. அண்மையில் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்ற பி.

Updated On :12 ஜூலை 2013, 7:09 pm IST

வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் சிறைத்துறை டிஐஜி கோவிந்தராஜ் வெள்ளிக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதில் இரு செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

வேலூர் மத்தியச் சிறையில் கடந்த இரு ஆண்டுகளாக தொடர்ந்து செல்போன்கள், கஞ்சா ஆகியன கைப்பற்று வருவது அதிகரித்துள்ளது. அண்மையில் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்ற பி.விஜயகுமார் நடத்திய ஆய்விலும் செல்போன்கள், சிம்கார்டுகள் மற்றும் கஞ்சா ஆகியன கைப்பற்றன.இதைத் தொடர்ந்து சிறை நிர்வாகத்தினரே அடிக்கடி வளாகத்தில் திடீர் ஆய்வு நடத்தி வருகின்றனர். இதில் 15-க்கும் மேற்பட்ட செல்போன்கள் கடந்த ஒரு மாதத்தில் கைப்பற்றப்பட்டுள்ளன.இந்நிலையில், சிறைத்துறை டிஐஜி கோவிந்தராஜ், சிறைக்கு இன்று காலை

வந்து திடீர் ஆய்வை மேற்கொண்டார். இதில் சிறை கண்காணிப்பாளர் அறிவுடைநம்பி, கூடுதல் கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார், வார்டர்கள் அடங்கிய குழுவினர் சிறை வளாகம் முழுவதும் சோதனை மேற்கொண்டனர். இதில் 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.சிறையில் செல்போன் மற்றும் கஞ்சா நடமாட்டத்தை கட்டுப்படுத்த தொடர்ந்து ஆய்வு நடத்துமாறு சிறை அதிகாரிகளை டிஐஜி கேட்டுக் கொண்டார்.

கண்காணிப்பில் குறைபாடு?

வேலூர் மத்தியச் சிறைக்கு கைதிகளை காண வருவோர் சிறை வாயிலில் சோதனையிடும் காவலர்களால் முழுமையாக சோதனையிடப்படுவதில்லை. பல நேரங்களில் கடமை தவறி எதிர்பார்ப்புடன் பார்வையாளர்களிடம் செயல்படுவோரால்தான் அதிக அளவில் செல்போன்கள் மற்றும் கஞ்சா உள்ளிட்டவை கடத்தப்படுகின்றன.காலை நேரத்தில் சிறைக்குள் வெளி நபர்கள் சிலர் காய்கறி உள்ளிட்ட உணவு பொருள்களை கொண்டு செல்லும்போதும் கண்காணிப்பில் கோட்டை விடப்படுகிறது.  சிறை சுற்றுச் சுவர் பகுதியில் போதுமான அளவில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவது இல்லை. இதுபோன்ற குறைபாடுகளால்தான் நாள்தோறும் சிறையில் செல்போன்கள், கஞ்சா ஆகியன சிக்குகின்றன என்று சிறைத் துறை நிர்வாகம் குறித்து ஓய்வு பெற்ற காவல்துறை அலுவலர்கள் கருத்து கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.