நாகை அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த ரா. முத்துலெட்சுமி என்பவருக்குச் சொந்தமான மீன்பிடி படகும், நாகூர் பகுதியைச் சேர்ந்த அ. சக்திவேல், கு. அப்பாதுரை ஆகியோருக்குச் சொந்தமான மீன்பிடி படகுகளும் கடந்த 11-ம் தேதி, நாகை மாவட்டம், காமேஸ்வரத்துக்குக் கிழக்கே கடல் பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்தன.அப்போது, அங்கு 15 படகுகளில் வந்த இலங்கைக் கடற்படையினரும், சிங்கள மீனவர்களும் நாகை, நாகூர் மீனவர்களின் 3 படகுகளையும் சுற்றி வளைத்து, அவர்கள் கடலில் வீசியிருந்த மீன்பிடி வலைகளை அறுத்து, பறித்துக் கொண்டுச் சென்றுள்ளனர்.