வேன் டிரைவரை தாக்கி பணம் பறித்தவர் கைது.
சிந்தாமணி பகுதியில் வேன் டிரைவரை தாக்கி பணம் பறித்த ஒருவரை போலீசார் கைது செய்தனர்.இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.


சிந்தாமணி பகுதியில் வேன் டிரைவரை தாக்கி பணம் பறித்த ஒருவரை போலீசார் கைது செய்தனர்.இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த புலியூரை சேர்ந்தவர் சாமிநாதன்(28).சரக்கு வேன் டிரைவராக உள்ளார்.இவர் செவ்வாய்கிழமை மதுரையிலிருந்து சிந்தாமணி வழியாக வேனில் சரக்குகளை ஏற்றிக்கொண்டு வந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் சாமிநாதனை தாக்கி,அவர் வைத்திருந்த ரூ.1500 பணத்தை பறித்துக்கொண்டு ஓடிவிட்டனர். இதுகுறித்து அவனியாபுரம் போலீஸார் வழக்குபதிவு செய்து பனையூரை சேர்ந்த அசோக்(24) என்பவரை கைது செய்தனர்.இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட அதேபகுதியை சேர்ந்த மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...