இறுதிச் சடங்குக்கு வந்தவர்கள் பண்ருட்டி காவல் நிலையத்தில் முற்றுகை
இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள வந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால், அவர்கள் பண்ருட்டி காவல்நிலையத்தை முற்றுகையிட்டுள்ளனர்.


இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள வந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால், அவர்கள் பண்ருட்டி காவல்நிலையத்தை முற்றுகையிட்டுள்ளனர்.
புதுச்சேரி கன்னியாக்கோவில், புதுநகர் பகுதியைச் சேர்ந்தவர் ரம்யா (26). இவருக்கும், பண்ருட்டி வட்டம் திராசு கிராமத்தைச் சேர்ந்த சிவப்பெருமாள் (32) என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
பின்னர் சிவப்பெருமாள் புதுச்சேரியிலேயே குடியேறிவிட்டார். இவர்களுக்கு இரண்டரை வயதில் பெண் குழந்தை உள்ளது. இதனிடையே கணவன் - மனைவி இடையே குடும்பப் பிரச்னை இருந்து வந்ததாக தெரிய வருகிறது.
செவ்வாய் கிழமை மாலை வேலைக்குச் சென்ற ரம்யா, வீட்டுக்கு வந்து பார்த்த போது சிவப்பெருமாள் தூக்கிட்டு இறந்த நிலையில் கிடந்துள்ளார். இது குறித்து புதுச்சேரி, கிருமாம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். புதுச்சேரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு திராசு கிராமத்துக்கு சிவப்பெருமாளின் பிரேதம் கொண்டு வரப்பட்டது.
இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக ரம்யா மற்றும் அவர்களது உறவினர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் வாகனத்தில் திராசு கிராமத்துக்குச் சென்றனர்.
அப்போது அங்கிருந்த சிவப்பெருமாளின் உறவினர்கள் கொம்பு உள்ளிட்ட ஆயுதங்களால், ரம்யா உள்ளிட்டோரை அடித்துள்ளனர். இதில் கலைவாணன் என்பவருக்கு தலையில் அடிபட்டுள்ளது.
இதனால் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாமல் இறந்தவரின் மனைவி ரம்யா உள்ளிட்டோர் பண்ருட்டி காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர்.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு காவல்துறையினர் விரைந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...