லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளிகளில் காலியாகவுள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு

விருதுநகர் மாவட்டத்தில் தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு முகாம் வருகிற 20, 22 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கிறது.

Updated On :18 ஜூலை 2013, 10:34 am

விருதுநகர் மாவட்டத்தில் தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு முகாம் வருகிற 20, 22 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கிறது.

 தமிழகம் முழுவதும் புதிதாக 100 அரசு உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன. அதில், 900 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடம் காலியாக உள்ளது. அதன் அடிப்படையில் விருதுநகர் மாவட்டத்தில், ஸ்ரீவில்லிபுத்தூர் திரு.வி.க அரசு மேல்நிலைப்பள்ளி, சிவகாசி ரிசர்வ் லைன் அரசு மேல்நிலைப்பள்ளி, அருப்புக்கோட்டையில் அரசு மேல்நிலைப்பள்ளி, செம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, வெள்ளையாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய  பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

 எனவே இப்பள்ளிகளில் காலியாக உள்ள 45 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கான கலந்தாய்வு முகாம் குறிப்பிட்ட நாள்களில் தங்கம்மாள்-பெரியசாமி நாடார் நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுகிறது. இதில், வருகிற 20-ம் தேதி மாவட்டத்திற்குள்ளும், 22-ம் தேதி மாவட்டம் விட்டு மாவட்டத்திற்கும் என கலந்தாய்வு முகாம் நடத்தப்பட இருக்கிறது. எனவே இக்கலந்தாய்வு முகாமில் பங்கேற்கும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் காலை 10 மணிக்குள் வந்து பங்கேற்க வேண்டும். இதில், ஏற்கனவே பொது மாறுதல் கலந்தாய்வு முகாமில் பங்கேற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுகத்கு, இதில் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டாது.

எனவே மாறுதல் கோரும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மூலம் வருகிற 19-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அளிக்க வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்(பொறுப்பு) அமுதவள்ளி தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.