பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பேருந்து மீது பைக் மோதி விபத்து: 2 பேர் பலி

நெல்லை மாவட்டம் புளியங்குடி பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் முகமது ரபிக் (35). அதே ஊர் காயிதே மில்லத் தெருவை சேர்ந்தவர் கலீல் (33) ஆகிய 2 பேரும் குற்றாலத்திற்கு சென்று விட்டு பைக்கில் ஊர் திரும்பும்

News image
Updated On :20 ஜூலை 2013, 11:05 am

குமார முருகன்

நெல்லை மாவட்டம் புளியங்குடி பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் முகமது ரபிக் (35). அதே ஊர் காயிதே மில்லத் தெருவை சேர்ந்தவர் கலீல் (33) ஆகிய 2 பேரும் குற்றாலத்திற்கு சென்று விட்டு பைக்கில் ஊர் திரும்பும் போது, கடையநல்லூர் அருகே தர்மாபுரம் பகுதியில் வந்தபோது முன்னே சென்ற வாகனத்தை முந்த முயன்றனர்.அப்போது எதிரே திருச்சியிலிருந்து குற்றாலம் நோக்கி வந்த தனியார் பேருந்து மீது மோதினர். இந்த விபத்தில் பைக்கில் வந்த முகமது ரபிக்,கலீல் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.இது குறித்து சொக்கம்பட்டி போலீஸார் விசாரணை நடத்தி பஸ் டிரைவர் திருச்சி மேலசிந்தாமணி காவேரிநகரை சேர்ந்த கருணாகரன்(48) என்பவரை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.