அம்பாசமுத்திரத்தில் கடையடைப்பு, மறியல்: பா.ஜ.க வினர் 58 பேர் கைது
தமிழக பாஜக பொதுசெயலர் வி. ரமேஷ் கொலை செய்யப்பட்டதை கண்டித்து அம்பாசமுத்திரத்தில் இன்று கடைகள் அடைக்கப்பட்டன. மறியில் ஈடுபட்ட பாரதிய ஜனதா கட்சியினர் 58 பேர்


தமிழக பாஜக பொதுசெயலர் வி. ரமேஷ் கொலை செய்யப்பட்டதை கண்டித்து அம்பாசமுத்திரத்தில் இன்று கடைகள் அடைக்கப்பட்டன. மறியில் ஈடுபட்ட பாரதிய ஜனதா கட்சியினர் 58 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
பா.ஜ.க பொதுச்செயலர் ஆடிட்டர் வி. ரமேஷ் கொலை செய்யப்பட்டதை கண்டித்து இன்று கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.இதை தொடர்ந்து அம்பாசமுத்திரத்தில் பிரதான சாலையில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.அம்பாசமுத்திரத்தில் பாரதிய ஜனதா கட்சியினர் திரையரங்கு அருகில் இருந்து ஊர்வலமாக வந்தனர். வண்டி மலைச்சி அம்மன் கோவில் அருகில் கட்சியின் மாவட்ட துணைத் தலைவர் தாமரைக்கண்ணன் தலைமையில் மறியலில் ஈடுபட்டனர். 14 பெண்கள்உள்பட 32 பேர் கைது செய்யப்பட்டனர்.
சேரன்மகாதேவியில் பஸ் நிலையம் அருகில் பாரதிய ஜனதா கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர். கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் இருதயராஜ், மாவட்டசெயலர் கூனியூர் கணேசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆறுமுகநயினார்,சேரன்மகாதேவி ஒன்றிய தலைவர் சண்முகவேல், மூத்தோர் பிரிவு மாவட்டத் தலைவர் எஸ். வள்ளிநாயகம் உள்பட 26 பேர் கைது செய்யப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...