விரைவில் வரவுள்ள மக்களவை தேர்தலில், இடதுசாரி கட்சிகள் காங்கிரஸ், பாஜக அல்லாத ஒரு மாற்று கொள்கை அரசியல் பாதையை உருவாக்க முயற்சி எடுத்து வருகின்றன என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலரும், மாநிலங்களவை உறுப்பினருமான டி.ராஜா தெரிவித்தார்.
வேலூரில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
நம்முடைய பொருளாதாரத்தில் பல்வேறு துறைகளில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பது என்ற தவறான முடிவை காங்கிரஸ் அரசு எடுத்துள்ளது.தொலைபேசி துறையில் 100 சதவீத அன்னிய முதலீடு, பாதுகாப்பு மற்றும் இன்சூரன்ஸ் துறைகளில் அன்னிய முதலீட்டை அதிகரிப்பது போன்ற தவறான முடிவுகளை மத்திய அமைச்சரவை எடுத்துள்ளது. நாட்டின் வளர்ச்சிக்கும், தேசநலனுக்கும் உகந்த முடிவுகள் அல்ல என்று ஏற்கெனவே எங்கள் கட்சி சார்பில் தெரிவித்துள்ளோம். மக்களவை மழைக்கால கூட்டத் தொடரின்போது இப்பிரச்னையை நாங்கள் எழுப்புவோம்.தேசிய அளவில் 3-வது அணி அமைக்கும் முயற்சி எந்த அளவில் உள்ளது என்று கேட்கிறீர்கள். 3-வது அணி என நாங்கள் குறிப்பிடவில்லை. இம்மாத தொடக்கத்தில் தில்லியில் இடதுசாரி கட்சிகளிடையிலான மாநாடு நடைபெற்றது. அதில் 10 அம்ச திட்டம் முன்வைக்கப்பட்டது.
நாட்டின் பொருளாதார கொள்கைகள், நிதிக்கொள்கைகளில் காங்கிரஸ், பாஜகவுக்கு இடையே பெரிய வேறுபாடு இல்லை. இதனால்தான் நாட்டின் பொருளாதாரம் மிகவும் நலிந்துபோயுள்ளது. வேலையில்லா திண்டாட்டம் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. அரசால் விலைவாசியை கட்டுப்படுத்த முடியவில்லை. பணவீக்கம்,ரூபாய் வீழ்ச்சியை கட்டுப்படுத்த முடியவில்லை.இந்நிலையில், நாட்டின் பொருளாதாரத்தை நிலைநிறுத்தவும், இந்திய மக்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றி, மக்களின் நலன் சார்ந்த கொள்கைகளை பலப்படுத்துவதற்கும், ஒரு மாற்று கொள்கை தேவைப்படுகிறது.எனவே, இடதுசாரி கட்சிகள் காங்கிரஸ், பாஜக அல்லாத ஒரு மாற்று கொள்கையுடைய அரசியல் பாதையை உருவாக்க முயற்சி எடுத்து வருகின்றன. இதுஒரு தேர்தல் அணியாக இப்போதே உருவாகிவிடுமா என்று சொல்ல இயலாது.
மக்களவை தேர்தலின்போது தேசிய அளவில் ஒரு அணி உருவாகவில்லையென்றாலும், அந்தந்த மாநில நிலைமைகளுக்கு ஏற்ப, அரசியல் சூழலுக்கு ஏற்ப, இடதுசாரி கட்சிகள் தேர்தல் உடன்பாட்டின் மூலம் அணிகளை உருவாக்க முயற்சிக்கும். தேர்தலில் மக்கள் அளிக்கும் தீர்ப்பையொட்டி ஒரு மாற்று ஆட்சியை உருவாக்குவது பற்றி யோசிப்போம்.தமிழகத்தில் அதிமுக, இடதுசாரி கட்சிகளுடனான உறவு நல்ல முறையில் உள்ளது.அதிமுக அரசு பல்வேறு நிலைகளில் முற்போக்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. என்எல்சி பங்குகளை தனியாருக்கு விற்பதை எதிர்த்ததோடு, அதை அரசு வாங்கிக் கொள்ளும் என அறிவித்தது நல்ல முன்மாதிரியாகும்.இலங்கை தமிழர் பிரச்னை, இந்திய மீனவர் பிரச்னை ஆகியவற்றில் தமிழக அரசு வரவேற்கத்தக்க வகையில் செயல்பட்டு வருகிறது என்றார் ராஜா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பென்ஸ் படத்தில் இணைந்த ரவி மோகன்!
... புள்ளிகள்...

குடத்திற்குள் சிக்கிக்கொண்ட நாய்! போராடி மீட்ட உரிமையாளர்! | Thanjavur

கர்நாடகத்தில் எத்தனை துணை முதல்வர்கள்? கார்கே பதில்!
விடியோக்கள்

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK

திருக்கணிதப்படி குருபெயர்ச்சி பலன்கள்! June 1 நள்ளிரவு 2 மணி முதல் | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?


