சிதம்பரம் ஓமக்குளத்தில் கலக்கும் கழிவுநீர்!
சிதம்பரம் நகராட்சி பகுதிகுட்பட்ட பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீநடராஜர் கோயில் தீர்த்தகுளங்களில் ஒன்றான ஓமக்குளத்தில் கழிவுநீர் கலப்பதால் அப்பகுதியில் உள்ள மக்கள் சுகாதார சீர்க்கேட்டினால்


சிதம்பரம் நகராட்சி பகுதிகுட்பட்ட பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீநடராஜர் கோயில் தீர்த்தகுளங்களில் ஒன்றான ஓமக்குளத்தில் கழிவுநீர் கலப்பதால் அப்பகுதியில் உள்ள மக்கள் சுகாதார சீர்க்கேட்டினால் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
சிதம்பரம் நகராட்சி பகுதிக்குப்பட்ட மந்தகரை பகுதியில் உள்ள வடிகால் வாய்க்காலில் நகராட்சி கழிவுநீர் கலந்து இந்த நீர் அருகாமையில் உள்ள ஓமக்குளத்தில் கலக்கிறது. இதனால் குளத்து நீர் பயன்படுத்த முடியாமல் அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். அதோடுமல்லாமல் ஓமக்குளம் கரையிலிருந்து வெள்ளந்தாங்கிஅம்மன் வரையில் உள்ள கால்வாய் முற்றிலும் சாக்கடைநீராக ஓடுவதால் அப்பகுதி மக்கள் சுகாதார சீர்கேட்டினால் பல்வேறு நோய்களுக்குள்ளாகி கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
மந்தகரை ஸ்ரீராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி எதிரே உள்ள நாகக்கன்னிஅம்மன் கோயில் பின்புறம் உள்ள வடிகால் வாய்க்காலில் இருந்து ஓமக்குளத்தில் சாக்கடைநீர் கலக்கிறது. இதனால் அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் துர்நாற்றமும், சுகாதார சீர்கேட்டினாலும் காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்குள்ளாகி அவதிப்படுகின்றனர். எனவே நகராட்சி நிர்வாகம் மேற்கண்ட வடிகால் வாய்க்காலில் சாக்கடை நீர் கலப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், ஒமக்குளம் முதல் வெள்ளத்தாங்கிஅம்மன் வரையிலான கால்வாயை தூர்வாரி, காங்கிரீட் தடுப்புசுவர் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...