மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

காவல்துறைக்கு முழு சுதந்திரம் அளிப்பது நல்லதல்ல: தா.பாண்டியன்

தமிழகத்தில் காவல்துறை முழுமையாக செயல்பட வேண்டும். ஆனால் காவல்துறைக்கு முழு சுதந்திரம் அளிப்பது நல்லதல்ல. முதல்வர் தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும் என இந்திய

News image
Updated On :31 ஜூலை 2013, 12:43 pm

G.Sundararaj

தமிழகத்தில் காவல்துறை முழுமையாக செயல்பட வேண்டும். ஆனால் காவல்துறைக்கு முழு சுதந்திரம் அளிப்பது நல்லதல்ல. முதல்வர் தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் தெரிவித்தார்.

சிதம்பரம் நகருக்கு இன்று வருகை தந்த அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்: தமிழகத்தில் அனைத்து கட்சிகளைச் சேர்ந்தவர்களும், சமத்துவத்துடன் கொலை செய்யப்பட்டு வருகின்றனர். அதில் ஆளும் கட்சிக்கும் விதிவிலக்கல்ல. ஆளும் கட்சியினரும் கொலை செய்யப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் நடைபெறும் இத்தகைய கொலைகள் மற்றும் கொள்ளைகளை தடுத்து நிறுத்த வேண்டும். காவல்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும் தமிழகத்தில் உள்ள என்எல்சி, கூடங்குளம் அனு மின்நிலையம் ஆகியவற்றில் உற்பத்தியாகும் மின்சாரத்தை அதிகளவில் தமிழகத்திற்கு தர வேண்டும்.

மத்தியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு கடைபிடித்து வரும் தவறான பொருளாதார கொள்கையினால் இந்தியா பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் நடைபெற்றுள்ள ஊழல்களினால் பணம் கடத்தப்பட்டு, பதுக்கப்பட்டுள்ளது. கார்பரேட் நிறுவனங்கள் கடந்த 5 ஆண்டுகளில் வரிசலுகை, ஊக்கத் தொகை என்ற வகையில் மட்டும் ரூ.5 லட்சம் கோடி மத்தியஅரசு வழங்கியுள்ளது. இதன் காரணமாக பண வீக்கம், நாணய மதிப்பு இழப்பு ஏற்பட்டுள்ளது. அண்மையில் நெருக்கடி எரிபொருள் விலையேற்றம்தான் முக்கிய காரணமாகும். ஈரான் நாடு கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவை இந்திய ரூபாய்க்கே தர தயாராக இருந்தும், அமெரிக்காவிற்கு அஞ்சி வாங்க மறுத்துவிட்டோம். ஈராண் மீண்டும் தர தயாராக இருந்தும் இந்தியா வாங்க மறுத்துவிட்டது. சீனா, பாகிஸ்தான் நாடுகள் ஈரானிடம் வாங்கி வருகின்றன. இந்தியா சுயசார்பு கொள்கையை கைவிட்டு விட்டது. இதனால் சீனா மிக வேகமாக முன்னேறி வருகிறது.

இந்தியாவில் விவசாயிகள் தற்கொலை அதிகரித்துவிட்டது. 7 மாதங்களில் விதர்பாலில் மட்டும் 11 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். எனவே மத்திய ஆட்சியை அகற்றிவிட்டு மாற்றுக் கொள்கையோடுள்ள கூட்டு கட்சிகளின் ஆட்சி அமைக்க இந்திய கம்யூ கட்சி மற்றும் இடது சாரி கட்சிகள் முயற்சி மேற்கொண்டுள்ளன. யார் அடுத்த பிரதமர் என்பதை விட, எத்தகைய கொள்கைகள் என்பதுதான் முக்கியம். மாற்று ஆட்சி அமையப் பெற்றால் புொதுத்துறைகள் பலப்படுத்தப்படும், நதிகள் இணைப்பு உடனே எடுத்தும் கொள்ளப்படும். இயற்கை செல்வம் தனியாரிடம் ஏலம் விடப்பட மாட்டாது. நடுத்தர சிறு, குறு தொழில்களுக்கு முழு பாதுகாப்பும், ஊக்கமும் அளிக்கப்படும். விவசாயதுறைக்கென தனி திட்டமும், பட்ஜெட்டும் வெளியிடப்படும். மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் வழங்கப்படும், அனைத்து மாநிலங்களும் மறு சீரமைப்பு செய்யப்படும். தெலுங்கான மாநிலம் அமைக்கும் கோரிக்கை குறித்து எடுக்கப்பட்ட முடிவு அரசியல் முடிவாக எடுத்திருந்தாலும், தீர்வு காணப்படாமல் மத்தியஅரசு இழுத்தடித்துள்ளதை காட்டுகிறது.

தமிழ்நாட்டில் நீர் பற்றாக்குறை குறித்து நிரந்திர சிக்கல் உள்ளது. தற்போது கர்நாடகா, கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் பெய்த மழையினால் தமிழகத்தில் அணைகள் நிரம்பியுள்ளன. தமிழ்நாட்டின் மையப்பகுதியில் மழை இன்றி தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் மரங்கள், செடிகள் காய்ந்து அழித்துள்ளன. குறிப்பாக தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஒன்றரை லட்சம் பனை மரங்கள் அழித்துவிட்டதாக மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர். எனவே தமிழகஅரசு குடிநீர் பிரச்சனையை தீர்க்கவும், பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தூத்துக்குடியில் ஸ்பிக் தொழிற்சாலையில் ஒரு பிரிவான தமிழ்நாடு அலுமினியம் கெமிக்கல் நிறுவனத்தை மூடி உள்ளனர். இத்தொழிற்சாலையை தமிழகஅரசே ஏற்று நடத்த வேண்டும். கல்வித்துறையில் தொடக்கக்கல்வி முதல் பல்கலைக்கழகம் வரை காலியான பணியிடங்களை நிரப்ப வேண்டும். கடலூர் மாவட்டம் வீராணம்ஏரி தூர்வாரும் பணியை மழைக்கு முன்னதாக உரிய நேரத்தில் செய்து நீரை தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் கடந்த 2 வருடங்களில் மக்கள் நலத்திட்டங்கள் அறிவித்தது போல் இந்தியாவில் எம்மாநிலத்திலும் நடைபெறவில்லை. இலங்கை தமிழர்கள் கொல்லப்பட்ட பிரச்சனையில், அப்போது அரசியலிலும், ஆட்சியிலும் உச்சக்கட்டத்தில் இருந்த கருணாநிதி தடுக்காததை மனசாட்சி உள்ள தமிழர்கள் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என தா.பாண்டியன் தெரிவித்தார். பேட்டியின் போது மாநில செயற்குழு உறுப்பினர் டி.மணிவாசகம், மாவட்டச் செயலாளர் எம்.சேகர், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் வி.எம்.சேகர் ஆகியோர் உடனிருந்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.