விருதுநகர் அருகே சாலையோர மரத்தில் மோதி விவசாயி படுகாயம் அடைந்து உயிரிழந்தார்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே விஸ்வநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி கருப்பசாமி(54). இவரது சொந்த வேலையின் காரணமாக சனிக்கிழமை இரவு மதுரை வரையில் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது, அங்கு பணிகளை முடித்துக் கொண்டு அதிகாலையில் சிவகாசிக்கு புறப்பட்டு வந்தார். அப்போது விருதுநகர்-சிவகாசி சாலையில் மத்தியசேனைப் பகுதியில் வந்து கொண்டிருந்த போது எதிர்பாரத விதமாக சாலையோர புளியமரத்தில் பைக் மோதியது. இதில், கருப்பசாமி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து தகவலறிந்த ஆமத்தூர் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அதையடுத்து, சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரணை செய்து வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.