மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

விருதுநகரில் ஒன்றியக் குழுத் தலைவரை கத்தியால் தாக்க முயற்சி செய்தவர் மீது புகார்

விருதுநகர் ஊராட்சி ஒன்றியக் குழுதலைவராக இருந்து வருபவர் கி.கலாநிதி. இவருக்கும் அன்னை சிவகாமியாபுரம் பகுதியைச் சேர்ந்த அதியமான். இவரும் அதிமுகவைச் சேர்ந்தவர் என்பதால் கூட்டுறவு சங்கத் தேர்தலில் போட்டியிடுவதற்கு இடம் ஒதுக்கிக் கொடுத்துள்ளனர். ஆனால், திடீரென தேர்தலில்

Updated On :2 ஜூன் 2013, 11:56 am

காரை வழிமறித்து கத்தியால் தாக்குவதற்கு முயற்சி செய்ததாக அதிமுகவைச் சேர்ந்த ஒருவர் மீது ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் மேற்கு காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

விருதுநகர் ஊராட்சி ஒன்றியக் குழுதலைவராக இருந்து வருபவர் கி.கலாநிதி. இவருக்கும் அன்னை சிவகாமியாபுரம் பகுதியைச் சேர்ந்த அதியமான். இவரும் அதிமுகவைச் சேர்ந்தவர் என்பதால் கூட்டுறவு சங்கத் தேர்தலில் போட்டியிடுவதற்கு இடம் ஒதுக்கிக் கொடுத்துள்ளனர். ஆனால், திடீரென தேர்தலில் நிற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போட்டியிடும் வாய்ப்பை தடுத்தனர். இது தொடர்பாக இருவருக்கும் அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் இன்று காலையில் அமைச்சர் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக புறப்பட்டுச் சென்றார். அப்போது, அன்னை சிவகாமியாபுரம் அருகே வரும் போது அதியமான் காரை வழிமறித்து தகராறு செய்தராம்.

பின்னர் வாக்கு வாதம் முற்றியதில், அமைச்சரிடம் உன்னை பற்றி புகார் செய்வேன் என்றும், திடீரென இடுப்பு பகுதியில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அதியமான் கத்தியால் தாக்க முயற்சி செய்துள்ளார். அப்போது, பொதுமக்கள் மற்றும் கட்சியினர் உள்ளிட்டோர் வந்ததை அடுத்து அப்பகுதியிலிருந்து அதியமான் தப்பியோடினார். இது தொடர்பாக விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் கி.கலாநிதி புகார் செய்தார். அதன் பேரில் போலீஸார் அதியமான் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.