மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவுதமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்! வாக்குப்பதிவு தொடங்கியது!!வாக்குச்சாவடிகளில் நீா்ச்சத்து இழப்பைத் தடுக்க ஓஆா்எஸ் கரைசல் சட்டப்பேரவை தோ்தல்: விமான கட்டணங்கள் பல மடங்கு உயா்வு ஹோா்முஸ் நீரிணை பிரச்னையால் இந்தியாவுக்கு நேரடி பாதிப்புபுகைபிடித்தல் இல்லாத புதிய தலைமுறை- பிரிட்டனில் வரலாற்று மசோதா நிறைவேற்றம்
/

கடலூர் மாவட்டத்தில் எஸ்எஸ்ஐகள், தலைமை காவலர்கள் 354 பேர் பணி இடமாற்றம்

கடலூர் மாவட்டத்தில் கடலூர், சிதம்பரம், நெய்வேலி, பண்ருட்டி, விருத்தாசலம், சேத்தியாத்தோப்பு, திட்டக்குடி ஆகிய 7 உட்கோட்டங்கள் உள்ளது. இதில் 6 அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் உள்பட 52 போலீஸ் நிலையங்கள் உள்ளன. இந்த போலீஸ் நிலையங்களில் தொடர்ந்து 3

Updated On :3 ஜூன் 2013, 9:06 am

கடலூர் மாவட்டத்தில் எஸ்எஸ்ஐகள், தலைமைக் காவலர்கள் 354 பேரை இடமாற்றம் செய்து எஸ்பி ஆ.ராதிகா உத்தரவிட்டுள்ளார்.

கடலூர் மாவட்டத்தில் கடலூர், சிதம்பரம், நெய்வேலி, பண்ருட்டி, விருத்தாசலம், சேத்தியாத்தோப்பு, திட்டக்குடி ஆகிய 7 உட்கோட்டங்கள் உள்ளது. இதில் 6 அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் உள்பட 52 போலீஸ் நிலையங்கள் உள்ளன. இந்த போலீஸ் நிலையங்களில் தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வரும் எஸ்எஸ்ஐகள், தலைமை காவலர்கள், முதல்நிலை காவலர்களை பொதுஇடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதில் மாவட்டம் முழுவதும் 149 எஸ்எஸ்ஐகள், 205 தலைமைக்காவலர்கள், முதல்நிலை காவலர்களை அவர்கள் பணியில் இருக்கும் போலீஸ் நிலையங்களில் இருந்து வேறு போலீஸ் நிலையங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த 20 பேரும், கடலூர் முதுநகர் போலீஸ் நிலையத்தில் 18 பேரும், கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் 20 பேரும், தேவனாம்பட்டிணம் போலீஸ் நிலையத்தில் 10 பேரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோல் மற்ற போலீஸ் நிலையங்களில் பணியாற்றி வந்த எஸ்எஸ்ஐகள், தலைமை காவலர்கள், முதல்நிலை காவலர்கள் உள்பட மொத்தம் 354 பேரை இடமாற்றம் செய்து எஸ்பி ஆ.ராதிகா உத்தரவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.