ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

வேளாங்கண்ணி கடலில் குளித்த 2 இளைஞர்கள் மாயம்

நாகை மாவட்டம், வேளாங்கண்ணி கடலில் குளிக்கச் சென்ற 2 இளைஞர்களைக் காணவில்லையென வேளாங்கண்ணி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :3 ஜூன் 2013, 5:32 pm

சங்கர்

நாகை மாவட்டம், வேளாங்கண்ணி கடலில் குளிக்கச் சென்ற 2 இளைஞர்களைக் காணவில்லையென வேளாங்கண்ணி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், குப்பச்சிபட்டி, ஆர்.சி தெருவைச் சேர்ந்தவர் சாமி (45). இவரும், இவரது உறவினர்கள் பிச்சை, அந்தோணிசாமி உள்ளிட்டோரின் குடும்பத்தினரும் கடந்த சில நாள்களுக்கு முன்பு நாகை மாவட்டம், வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்து தங்கியுள்ளனர்.

இந்த நிலையில், சாமியின் மகன் கெüதமன்(21), பிச்சை மகன் அஜித்குமார்(16) மற்றும் 2 இளைஞர்கள் ஞாயிற்றுக்கிழமை வேளாங்கண்ணி கடலில் குளிக்கச் சென்றுள்ளனர்.

குளிக்கச் சென்ற 4 பேரில் கெüதமன், அஜித்குமார் ஆகிய 2 பேர் மட்டும் அறைக்குத் திரும்பவில்லை. அவர்களுடன் குளிக்கச் சென்று அறைக்குத் திரும்பிய 2 இளைஞர்களும், கெüதமன், அஜித்குமார் ஆகிய 2 பேரும் தொடர்ந்து கடலில் குளித்துக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளனர்.

நீண்ட நேரம் ஆகியும் கெüதமன், அஜித்குமார் ஆகிய 2 பேரும் அறைக்குத் திரும்பாததால் சந்தேகமடைந்த உறவினர்கள், அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், இதில் எந்தவித பலனும் கிடைக்கவில்லை.

இது குறித்து சாமி அளித்த புகாரின் பேரில் வேளாங்கண்ணி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

காவல் துறை மற்றும் தீயணைப்பு வீரர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.