விருதுநகரில் அரசு மருத்துவமனை ஊழியர் தூக்கிட்டு தற்கொலை

தூததுக்குடி பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார்(28). இவர் விருதுநகர் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் நர்சிங் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் அரசு மருத்துவமனை வளாகம் எதிரே உள்ள தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கி வேலைக்குச் சென்று
Updated on
1 min read

விருதுநகரில் தனியார் தங்கும் விடுதியில் அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு உதவியாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தூததுக்குடி பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார்(28). இவர் விருதுநகர் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் நர்சிங் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் அரசு மருத்துவமனை வளாகம் எதிரே உள்ள தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கி வேலைக்குச் சென்று வருகிறார். இந்நிலையில் இரண்டு நாள்களாக பணிக்குச் செல்லாமல் விடுப்பு எடுத்து அறையில் தங்கியிருந்தாராம். மேலும், ஞாயிற்றுக்கிழமை இரவு வெளியே உணவு அருந்தி விட்டு அறைக்குள் சென்றாராம். அதையடுத்து, இன்று காலை முதல் வெளியில் நடமாட்டம் இல்லாத காரணத்தால் தங்கும் விடுதியைச் சேர்ந்தவர்கள் பிற்பகலில் அறைப்பக்கம் செனறு கதவு ஜன்னல் வழியே பார்த்துள்ளனர். அப்போது, உள்ளே உத்தரத்தில்  தூக்கிட்டு உயிரிழந்துள்ளது தெரியவந்தது.

உடனே இது தொடர்பாக விருதுநகர் கிழக்கு காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் அளித்தனர். அதையடுத்து, தூத்துக்குடியில் இருக்கும் தாய், தந்தைக்கு தெரியப்படுத்தியுள்ளனர். அவர்கள் வந்து பின்னர் தான் தற்கொலைக்கான காரணம் தெரியவரும். எனவே இது தொடர்பாக போலீஸார் தங்கும் விடுதி மற்றும் அரசு மருத்துவமனை ஊழியர்கள் உள்ளிட்டோரிடம் தீவிரமாக விசாரணை செய்து வருகிறார்கள்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com