விருதுநகர் அருகே அரசு அனுமதியின்றி மணல் கடத்தியதாக ஒருவரை வச்சக்காரப்பட்டி போலீஸார் கைது செய்ததோடு டிராக்டரையும் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தனர்.
விருதுநகர் அருகே அர்ச்சனா ஆற்றுப்பகுதியில் இரவு நேரங்களில் அரசு அனுமதியின்றி மணல் கடத்திச் செல்வதாகவும், கிராமங்களிலும் வேகமாக டிராக்டரை ஓட்டிச் செல்வதாகவும் போலீஸாரிடம் ரகசிய தகவல் அளித்தனர்.இதன் பேரில் வச்சக்காரப்பட்டி காவல் சார்பு ஆய்வாளர் முணியான்டி தலைமையில் போலீஸார் நடுவப்பட்டி- வேப்பிலைப்பட்டி கிராமச் சாலையில் இரவு ரோந்து சென்றனர். அப்போது, அச்சாலையில் வந்த டிராக்டர் போலீஸாரை பார்த்ததும் வேகமாக ஓட்டிச் சென்றனர். பின் தொடர்ந்து சென்று சுற்றிவளைத்து பிடித்தனர்.
அதையடுத்து, நடுவப்பட்டியைச் சேர்ந்தவருக்கு சொந்தமான டிராக்டர் என்பதும், அதில் டிரைவராக வேப்பிலைப்பட்டியைச் சேர்ந்த செல்வம்(34) என்பதும் விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து டிராக்டர் டிரைவரை கைது செய்ததோடு மணல் ஏற்றிய டிராக்டரை பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!

கௌரவம் உயரும் இந்த ராசிக்கு! தினப்பலன்கள்!

கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்பாடு, பட்டாசு வெடிப்பதற்கு புதிய சட்ட முன்வரைவு தேவை!

மாங்குடி மருதனாா் நினைவுத் தூணுக்கு மரியாதை
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

