விருதுநகர் அருகே கிணற்றில் இருந்து பிளஸ்2 மாணவியின் சடலத்தை போலீஸார் மீட்டு, கொலையா, தற்கொலையா என தீவிரமாக விசாரணை செய்து வருகிறார்கள்.
விருதுநகர் அருகே சத்திரரெட்டியப்பட்டியைச் சேர்ந்தவர் வேல்முருகன்(42). இவரது மகள் பாரதி(17). இவர் திருமங்கலம் அருகே வீ்ரப்பெருமாள்புரத்தில் தாத்தா வீட்டில் தங்கி தனியார் பிளஸ்2 படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த வாரம் கிராமத்தில் நடந்த பொங்கல் திருவிழாவில் உறவினர்களுடன் வந்து கலந்து கொண்டார். பின்னர் திருவிழா முடிந்ததும் தாத்தா அழைத்த நிலையில், இரண்டு நாள்கள் கழித்து வருவதாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அதற்கு மறுநாளிலிருந்து திடீரென காணமல் போனதாக பல்வேறு இடங்களிலும் தேடியுள்ளனர். ஆனால், தேடியும் கிடைக்காததால் இது தொடர்பாக வேல்முருகன் பாண்டியன் நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
இந்நிலையில் இன்று காலையில் கிராமத்தில் உள்ள காமராஜர் காலனிப் பகுதியில் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடியுள்ளனர். பந்து எடுப்பதற்காக கிணற்றுப் பக்கம் செல்கையில் உள்ளே இளம்பெண் சடலம் மிதந்துள்ளது. உடனே இது குறித்து கிராமத்தில் உள்ளவர்களிடமும், போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தனர். அதையடுத்து போலீஸார் விரைந்து வந்து கிணற்றில் மிதந்து கொண்டிருந்த மீட்டு விசாரணை செய்ததில், கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு காணமல் போன பாரதி என்பது தெரியவந்தது. எனவே சடலத்தை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து போலீஸார் கொலையா, தற்கொலையா என தீவிரமாக விசாரணை செய்து வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!

கௌரவம் உயரும் இந்த ராசிக்கு! தினப்பலன்கள்!

கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்பாடு, பட்டாசு வெடிப்பதற்கு புதிய சட்ட முன்வரைவு தேவை!

மாங்குடி மருதனாா் நினைவுத் தூணுக்கு மரியாதை
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

