பலத்த பாதுகாப்புடன் நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

விருதுநகர்-அழகாபுரி-வத்திராயிருப்பு நெடுஞ்சாலையில் கடுமையான  போக்குவரத்து நெருக்கடி மற்றும் மழைக்காலங்களில் ஓரத்தில் ஒதுங்க முடியாத நிலையில் களிமண் தரையாக இருந்தது. இதைக் கருத்தில்
பலத்த பாதுகாப்புடன் நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
Updated on
1 min read

விருதுநகர் அருகே பலத்த போலீஸார் பாதுகாப்புடன் சாலையோரத்தில் இரு பகுதிகளிலும் புல்டோசர் வாகனம் மூலம் ஆக்கிரமிப்புகள்  இடித்து அகற்றப்பட்டன.

விருதுநகர்-அழகாபுரி-வத்திராயிருப்பு நெடுஞ்சாலையில் கடுமையான  போக்குவரத்து நெருக்கடி மற்றும் மழைக்காலங்களில் ஓரத்தில் ஒதுங்க முடியாத நிலையில் களிமண் தரையாக இருந்தது. இதைக் கருத்தில் கொண்டு இச்சாலையை அகலப்படுத்த வேண்டும் என இப்பகுதி பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும், ராமநாதபுரம்-விருதுநகர்-மதுரை-தேனி ஆகிய மாவட்டங்களை இணைக்கும் முக்கிய சாலையாகவும் உள்ளது.எனவே பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று நெடுஞ்சாலை துறையின் பராமரிப்பில் இருந்த சாலை, தற்போது தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தப்பட்டு பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இச்சாலை ஒரங்களில் உள்ள கிராமங்களில் தனியார் கடை நடத்துக்கின்றவர்கள் மற்றும் வாடகைக்கு இருக்கிறவர்கள் உள்ளிட்டோர் ஊராட்சி அனுமதியில்லாமல் அவர்களாகவே கட்டடப்பணிகளை விரிவாக்கம் செய்து ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். ஏற்கனவே அவர்களாகவே ஆக்கிரமிப்புகளை எடுப்பதற்கு அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. ஆனால், யாரும் எடுக்க வராத நிலையில் சாலைப்பணிகள் பாதிக்கப்பட்டன.

இந்நிலையில் சிவகாசி வட்டாட்சியர் மைக்கேல்ராஜ், காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் கொண்ட குழுவினர் தலைமையில் இன்று திடீரென ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. அப்போது, கடை நடத்தி வருகின்றவர்கள் பாரபட்சமாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதாக எதிர்ப்பு தெரிவித்தனர். அதையடுத்து, அவர்களிடம் பேச்சுவார்த்தையில் போலீஸார் ஈடுபட்டனர்.அப்போது, பேருந்து நிறுத்தத்தில் ஒரு பகுதியில் மட்டும் சாலை அகலப்படுத்துவதற்கு தோண்டப்படுவதாகவும், மற்றொரு புரத்தில் ஆக்கிரமிப்புச் செய்யப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்து கோஷமிட்டனர். பின்னர் சாலையின் இருபுறங்களிலும் கடைகள், குடியிருப்புகளின் வாசல் படிகள் உள்ளிட்டவைகளும் இடிக்கப்பட்டன.

இதில், பாதுகாப்பு பணியில் சிவகாசி துணைக்காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் எம்.புதுப்பட்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com