விருதுநகர் மாவட்டத்தி்ல் சிறப்பாசிரியர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்தவர்களுக்கு வருகிற 8-ம் தேதி தங்கம்மாள்-பெரியசாமி நாடார் நகராட்சி பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் நடைபெற இருப்பதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்(பொறுப்பு) அமுதவள்ளி தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டத்தில் பள்ளிகளில் காலியாக உள்ள சிறப்பாசிரியர்கள் பணியிடத்திற்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது. அதன் அடிப்படையில் இசை ஆசிரியர்-11, தையல்-138, ஓவியம்-102, உடற்கல்வி-130, கணிப்பொறி-311, வாழ்க்கை கல்வி மற்றும் கட்டடப்பணி ஆசிரியர்-3 என மொத்தம் 695 பேர்கள் வரையில் விண்ணப்பித்துள்ளனர்.
இவர்களுக்கான நேர்முகத் தேர்வு வருகிற 8-ம் தேதி குறிப்பிட்ட இடத்தில் காலை 10-மணிக்கு தொடங்கி, தொடர்ந்து மாலை வரையில் நடைபெற இருக்கிறது. எனவே இப்பணிகளுக்கு விண்ணப்பம் செய்த அனைவரும் தவறாமல் நேர்முகத் தேர்வில் பங்கேற்க வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அமுதவள்ளி தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

