வேலைவாய்ப்பு, மறுவாழ்வு தொகையினை முன்னுரிமை அடிப்படையில் வழங்க வேண்டும் எனஎன்எல்சி நிறுவனத்திற்கு வீடு, நிலம் கொடுத்தவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியர் ரா.கிர்லோஷ்குமாரிடம் வியாழக்கிழமை அளித்த மனு விவரம்:கடந்த 1990-ம் ஆண்டு முதல் 2002-ம் ஆண்டு முடிய என்எல்சிக்கு நிலம், வீடு, கொடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு என்எல்சி நிறுவனத்தில் நிரந்தர வேலைவாய்ப்பினைப் பெற்றுத் தருவதற்கு தங்களுடைய கட்டுப்பாட்டில் உள்ள மாவட்ட வருவாய் அலுவலர்(தனி பொறுப்பு) மற்றும் தனித் துணை ஆட்சியர் (நில எடுப்பு அலுவலகம்) கடந்த 23 ஆண்டுகளாக எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
என்எல்சி நிறுவனத்திற்கு நிலம், வீடு கொடுத்து பாதிக்கப்பட்ட மக்கள் ஏற்படுத்த கூடிய நிலம், வீடு கொடுத்து பாதிக்கப்பட்ட சங்கங்களுக்கு, என்எல்சி நிறுவனம் முன்னுரிமை அளிக்காமல், அனைத்து ஒப்பந்தங்களுக்கும் படிவம் வழங்க மறுத்து வருகிறது. எனவே மாவட்ட வருவாய் அலுவலர் (தனி பொறுப்பு) நில எடுப்பு அலுவலகத்தில் நிலம், குடியிருப்பு வீடு கொடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கான வேலைவாய்ப்பு பட்டியலில் உள்ளபடி முன்னுரிமை உள்ளவர்களுக்கு 45 லட்சம் ரூபாய், 2ம் முன்னுரிமை உள்ளவர்களுக்கு 30 லட்சம் ரூபாய், 3ம் முன்னுரிமை உள்ளவர்களுக்கு 15 லட்சம் ரூபாய் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் செய்திகள் - நேரலை!

மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்! வாக்குப்பதிவு தொடங்கியது!!

இன்று யாருக்கு சாதகம்? தினப்பலன்கள்!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

