கடலூர் பொது மருத்துவமனையில் சிசேரியன் செய்யப்பட்ட பெண் மரணம் அடைந்ததை அடுத்து உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கடலூர் மேற்கு ராமாபுரம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவரின் மனைவி வாசுகி (30). இவர் நிறைமாத கர்பிணியாக இருந்த நிலையில், பிரசவத்துக்காக நேற்று இரவு கடலுர் பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இவருக்கு சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது.
இந்த நிலையில், அவருக்கு அதிகமான ரத்தப் போக்கு ஏற்பட்டதால், ரத்தம் போதவில்லை என்று உறவினர்களிடம் வெளியில் இருந்து ரத்தம் வாங்கி வரச் சொல்லி மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.
இதற்கிடையே மருத்துவமனையில் இருந்த ரத்தத்தை மருத்துவர்கள் வாசுகிக்கு செலுத்தியுள்ளனர். எனினும், இன்று காலை 9 மணிக்கு வாசுகி உயிரிழந்து விட்டார்.
இது குறித்து அறிந்ததும், வாசுகியின் உறவினர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். வாசுகியின் உடலை வாங்க மறுத்து மருத்துவமனை முன்பு போராட்டம் நடத்தினர். போராட்டம் நடத்திய உறவினர்களுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திமுகவின் தோ்தல் அறிக்கை வெற்றிக்கு வழிவகுக்கும்: சிபிஐ மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன்

ஏப்.19 முதல் 21 வரை தோ்தல் அலுவலா்கள் தபால் வாக்கு செலுத்த ஏற்பாடு
மறுவரையறை மசோதா தோல்வி கொண்டாட்டங்கள் கண்டிக்கத்தக்கவை: அமித் ஷா

தாமதமாக வந்ததால் பேச முடியாமல் சென்ற சசிகலா
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

