கரூர் சேலம் அகல ரயில்பாதை அமைக்க நிலம் அளித்த 2 பேருக்கு நஷ்ட ஈடு வழங்காததால், நீதிமன்ற உத்தரவுபடி, இன்று கரூர் ரயில் நிலையத்தில் உள்ள பொருள்களை ஜப்தி செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர் மாவட்டம், ராமேசுரவம்பட்டியைச் சேர்ந்த செல்லப்பன், ராமாயி அம்மாள் இவர்களுடைய நிலம் கரூர், சேலம் அகல ரயல் பாதைக்காக ஆர்ஜிதப்படுத்தப்பட்டது. இதற்காக அரசு 1 சென்டுக்கு ரூ. 360 அளிக்க முன் வந்தது. ஆனால், அரசு நிர்ணயித்த நஷ்ட ஈட்டுத் தொகை குறைவாக உள்ளதாகவும், உரிய நஷ்ட ஈடு வழங்க உத்தரவிடக் கோரி, கரூர் சார்பு நீதிமன்றத்தில் கடந்த 2002-ம் ஆண்டில் வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் 2011-ம் ஆண்டில் செல்லப்பனுக்கு ரூ. 54 லட்சமும், ராமாயி அம்மாளுக்கு ரூ. 77 லட்சமும் நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்டது. ஆனால், ரயில்வே நிர்வாகம் நீதிமன்ற உத்தரவுபடி நஷ்ட ஈட்டை வழங்வில்லை. இதையடுத்து, செல்லப்பன், ராமாயி அம்மாள் ஆகியோர் நீதிமன்றம் உத்தரவை நிறைவேற்றுக்கோரும் மனுவைத் தாக்கல் செய்தனர். கடந்த ஏப்ரல் மாதம் கரூர் சார்பு நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதரன் நஷ்ட ஈடு வழங்காததால், ரயில் நிலையத்தில் உள்ள பொருள்களை ஜப்தி செய்யும்படி உத்தரவிட்டார்.
இதையடுத்து, இன்று நீதிமன்ற அமீனாக்கள் நந்தகுமார், விஜயகுமார், காதப்பாறை கிராம நிர்வாக அலுவலர் சிவானந்தன் மேலும், வழக்குத் தொடர்ந்த செல்லப்பன், ராமாயி அம்மாள் ஆகியோர் ரயில் நிலையத்தில் உள்ள பொருள்களை ஜப்தி செய்ய வந்தனர்.ரயில் நிலைய மேலாளர் சுந்தரராஜன் வெளியில் சென்றிருந்தார். ரயில் நிலைய அலுவலர் மனோஜ்குமாரிடம் ஜப்தி செய்ய வந்துள்ளதாக தெரிவித்தனர். உயர் அதிகாரிகளிடம் இதுகுறித்து தகவல் தெரிவித்து ஒரு சில நாள்களில் உரிய பதில அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டதையடுத்து, ஜப்தி செய்ய வந்தவர்கள் திரும்பிச் சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் மீண்டும் போர் தொடங்கும்: டிரம்ப்

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தொடர் அரிவாள் வெட்டு சம்பவம்: ஒருவர் சுட்டுப் பிடிப்பு!

வள்ளுவரைக் களங்கப்படுத்தாதீர்! - அமைச்சர் அருண்ராஜ்

சொல்லப் போனால்... திமுக – அதிமுக கூட்டணியும் அரைகுறை உண்மையும்!
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


