விருதுநகரில் வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை சித்ரவதை செய்த கணவர் உள்ளிட்ட 2 பேரை போலீஸார் கைது செய்தனர். இது தொடர்பாக 5 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
விருதுநகர் அருகே பாத்திமா நகரைச் சேர்ந்தவர் கார்ப்பகவள்ளி(22). இவருக்கும், இதே பகுதியைச் சேர்ந்த சந்திரசேகரன் என்பவரும் தீவிரமாக காதலித்து வந்தனர். இதையடுத்து, கடந்த 17.2.2012 அன்று திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வைத்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அதிலிருந்து கணவர் வீட்டில் கூட்டுக் குடும்பமாக குடித்தனம் செய்து வந்தனர்.
இந்நிலையில் கர்ப்பமாக இருந்ததால், தாய் வீட்டிற்கு குழந்தை பெற்றுக் கொள்வதற்காக சென்றார். தற்போது, குழந்தை பிறந்துள்ள நிலையில் இதுவரையில் கணவர் வீட்டிலிருந்து உறவினர்கள் யாரும் பார்க்காமலும், திரும்ப அழைக்காமலும் இருந்துள்ளனர். பின்னர் உடனே கணவர் வீட்டிற்குச் சென்று ஏன் என்னை அழைக்க வரவில்லை என கேட்டுள்ளார். அதற்கு கணவர், அவரது தந்தை சந்திரசேகரன், தாய் கனகவேல், உறவினர்களான ராணி, செல்வலட்சுமி, வீரலட்சுமி மற்றும் ஆறுமுகம் ஆகியோர் சேர்ந்து ரூ.5 லட்சம் பணம் கொடுத்தால் தான் வாழ முடியும் எனக் கூறி விரட்டியடித்துள்ளனர்.
இது குறித்து உடனடியாக விருதுநகர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸாரிடம் கர்ப்பகவள்ளி புகார் செய்தார். அதன் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து கணவர் கார்த்திகைசெல்வம் மற்றும் அப்பா சந்திரசேகரன் உள்ளிட்ட இருவரை கைது செய்தனர். மேலும், தலைமறைவான தாயார் உள்ளிட்ட உறவினர்கள் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!

கௌரவம் உயரும் இந்த ராசிக்கு! தினப்பலன்கள்!

கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்பாடு, பட்டாசு வெடிப்பதற்கு புதிய சட்ட முன்வரைவு தேவை!

மாங்குடி மருதனாா் நினைவுத் தூணுக்கு மரியாதை
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

