ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!
/

ஆகாயத்தாமரை அகற்றி தூர்வாரப்படாததால், விவசாயிகள் வெள்ளத்தை சந்திக்கும் அபாயம்

சிதம்பரத்தின் கிழக்கு பகுதியில் கொள்ளிடம் வடிநில கோட்ட பொதுப்பணித்துறையினர் வடிகால் வாய்க்கால்களில் படர்ந்துள்ள ஆகாயத் தாமரையை அகற்றி தூர்வாரி மராமத்து பணி செய்யப்படாததால்,

News image
Updated On :8 ஜூன் 2013, 10:58 am

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரத்தின் கிழக்கு பகுதியில் கொள்ளிடம் வடிநில கோட்ட பொதுப்பணித்துறையினர் வடிகால் வாய்க்கால்களில் படர்ந்துள்ள ஆகாயத் தாமரையை அகற்றி தூர்வாரி மராமத்து பணி செய்யப்படாததால், கடந்த ஆண்டு வறட்சியை சந்தித்த விவசாயிகள் இந்த ஆண்டு வெள்ளத்தை சந்திக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கீழணையிலிருந்து திறந்துவிடப்படும் நீர் வடக்குராஜன் வாய்க்கால் வழியாக வந்து சிதம்பரம் அருகே குமராட்சி கோப்பாடி மதகு அருகே, கான்சாகிப் வாய்க்காலாக பிரிகிறது. இந்த கான்சாகிப் வாய்க்கால் குமராட்சியில் தொடங்கி கிள்ளை பொன்னந்திட்டு வெள்ளாறு வரை சுமார்41.25 கி.மீ நீளம் உடையது. இந்த வாய்க்கால் முழுவதும் ஆகாயத்தாமரை செடிகள் படர்ந்து வாய்க்கால் தூர்ந்து போய் உள்ளது. கான்சாகிப்வாய்க்கால் மூலம் சிதம்பரத்தின் கிழக்கு பகுதியில் உள்ள கவரப்பட்டு, சித்தலாப்பாடி, நஞ்சமகத்துவாழ்க்கை, புஞ்சமகத்துவாழ்க்கை, நக்கரவந்தன்குடி, கொடிப்பள்ளிம, பின்னத்தூர், தில்லைவிடங்கன், கீழச்சாவடி, கிள்ளை, பொன்னந்திட்டு உள்ளிட்ட 20 வருவாய் கிராமங்களில் உள்ள 94410 ஏக்கர் நிலங்கள் கான்சாகிப் வாய்க்காலின் 34 மதகுகள் மூலம் பாசனம் பெறுகிறது. ஆனால் இந்த ஆண்டு கோடைக்காலத்தில் கான்சாகீப் வாய்க்காலில் உள்ள ஆகாயத் தாமரை அகற்றப்படாததாலும், மராமத்து பணிகளை நடைபெறாததாலும் கடந்த ஆண்டு வறட்சியை சந்தித்து சிதம்பரம் கிழக்கு பகுதி விவசாயிகள் வரும் ஆண்டு வெள்ளத்தை சந்திக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து விவசாய சங்கத் தலைவர் பி.ரவீந்திரன் தெரிவித்தது: இந்த ஆண்டு வறட்சியிலும் காட்டுமன்னார்கோயில் பகுதியில் விவசாயிகள் பயிரிட்ட நெற்பயிர் அதிகளவில் ஏக்கருக்கு 60 மூட்டைகள் விளைச்சல் கிடைத்துள்ளது. அதே வேளையில் சிதம்பரத்தின் கடைமடை பகுதிகளில் போதுமான அளவு பொதுப்பணித்துறையினர் நீர்விநியோகம் செய்யாததால் 71 கிராமங்களில் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டு விவசாயிகள் கடும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பொதுப்பணித்துறையினர் அலட்சியப் போக்கேதான் காரணம். தற்போது இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை அதிகளவில் பெய்யும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த ஆண்டு பொதுப்பணித்துறையினர் ஆறு, வாய்க்கால்களில் போதுமான அளவு மராமத்து செய்யப்படாததால் மழை நீர் கடலில் உடனடியாக வடியாமல் வெள்ளத்தை சந்திக்கும் அபாயம் உள்ளது.

1993-ம் ஆண்டு காவிரி டெல்டா கடை மடை பகுதியான சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் தாலுக்காக்களில் வறட்சியை சந்தித்த விவசாயிகள், 94-ம் ஆண்டு வெள்ளத்தை சந்தித்தனர். 2004-ம் ஆண்டு வறட்சியை சந்தித்த விவசாயிகள் 2005-ம் ஆண்டு மிகப்பெரிய வெளத்தை சந்தித்து நெற்பயிர்கள் நாசமாகி பெருத்த நஷ்டமடைந்தனர். அதேபோன்று 2012-ம் ஆண்டு வறட்சியை சந்தித்த சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் தாலுக்கா விவசாயிகள், 2013-ம் ஆண்டு வெள்ளத்தை சந்திக்கும் அபாயம் உள்ளது என்கிறார் பி.ரவீந்திரன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.