மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

கடந்த 50 ஆண்டுகளாக தூர்வாரப்படாத கண்மாய்களால் கிராமங்களில் விவசாயம் பாதிப்பு: விவசாயிகள் புகார்

விருதுநகர் மாவட்டப் பகுதிகளில் கடந்த 50 ஆண்டுகளாக கண்மாய்கள் தூர்வாரப்படாததால் மழை நீரை தேக்கி வைக்க முடியாமலும், இதனால் கிராமங்களில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும்

Updated On :8 ஜூன் 2013, 12:20 pm

விருதுநகர் மாவட்டப் பகுதிகளில் கடந்த 50 ஆண்டுகளாக கண்மாய்கள் தூர்வாரப்படாததால் மழை நீரை தேக்கி வைக்க முடியாமலும், இதனால் கிராமங்களில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

விருதுநகர் அருகே உள்ள செங்கோட்டை கிராம ஊராட்சியில் வலையங்குளம், செங்குன்றாபுரம், சமத்துவபுரம் மற்றும் சின்னப்பரெட்டிபட்டி கிராமங்களில் 4 கண்மாய்கள் உள்ளன. இந்தக் கண்மாய்களை நம்பி 500 ஹெக்டேர் பரப்பில் விவசாய நிலங்கள் உள்ளது. இந்நிலையில் கடந்த 50 ஆண்டுகளாக கரைப்பலப்படுததாமலும், தூர்வாரப்படாலும் கண்மாய் உள்ளது. அதனால், மேடாகவும், வரத்து நீர்க்கால்வாய்கள் தூர்ந்து போயும் உள்ளது.

இக்கண்மாய்களில் மழை பெய்தால் குறைந்தது இரண்டு மாதங்களுக்கு கூட தண்ணீர் தேக்கி வைக்க முடியாத நிலை இருக்கிறது. அதனால், மானாவாரி நிலங்களில் விவசாயம் செய்ய முடியாத நிலையுள்ளது. இதற்கு முன்பு வரையில் கண்மாய்களில் நீர் நிரம்பினால், கிணறுகளில் நீர் மட்டம் உயர்ந்து காணப்படும். விவசாய சாகுபடியும் சிறப்பாக நடைபெற்று வந்தது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக கிணறுகளில் போதிய நீர் ஆதாரம் இல்லாமல் பயிர் சாகுபடி செய்ய முடியாத நிலை இருப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும், தற்போது தேசிய ஊரக வேலை திட்டம் மூலம் பணிகள் மேற்கொள்ளப்பட்டாலும், முழுமையாக மேற்கொள்வதில்லையென என்ற புகார் பொதுவாக விவசாயிகளிடையே உள்ளது. இத்தி்டடத்தின் மூலம் கண்மாய்கள் பலப்படுத்தும் பணிகள் மற்றும் நீர் வரத்துக் கால்வாய்கள் தூர்வார வேண்டும். அதோடு, கருவேல மரங்களும் சூழ்ந்து காணப்படுவதால் அகற்றுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளப்படாமல் இருக்கிறது. இதில், பெரும்பாலன கால்வாய்கள் அப்பகுதியில் உள்ளவர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து செங்கோட்டை ஊராட்சி துணைத் தலைவர் தவசிலிங்கம் கூறுகையில், இந்தக் கண்மாய்களை கடந்த 50 ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருக்கிறது. இதனால், கண்மாய்களில் தண்ணீர் தேக்கி வைத்து விவசாயம் செய்ய முடியவில்லை. பெரும்பாலான கண்மாய்கள் மேடாகவே உள்ளது. அதேபோல், நீர் வரத்துக் கால்வாய்களும் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதால் மானாவாரி மற்றும் கிணற்றுப் பாசன விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்கு அரசுதான் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து கண்மாய்களையும், வரத்துக் கால்வாய்களையும் சீரமைக்க வேண்டும் என தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.