கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களை மே 31 வரை இலவசமாக பார்வையிடலாம் தூத்துக்குடி மாணவி கொலை: தர்ம முனீஸ்வரனுக்கு மரண தண்டனை விதிப்பு! பெட்ரோல் விலை உயர்வுக்கு ராகுல் கண்டனம்!கடுங்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை! காவல்துறைக்கு முதல்வர் விஜய் உத்தரவுவிஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி
/

சி.எஸ்.ஐ. திருமண்டல முன்னாள் லே செயலர் மீது தாக்குதல்: பாளை. யில் 4 பேர் கைது

நெல்லை சி.எஸ்.ஐ. திருமண்டலத்தின் முன்னாள் லே செயலர் வேதநாயகம். இவர், சனிக்கிழமை இரவு திருநெல்வேலி வேய்ந்தான்குளம் புதிய பஸ் நிலையம் அருகேயுள்ள தனது வீட்டிற்கு முன்னால் அமர்ந்து,

Updated On :9 ஜூன் 2013, 6:52 pm IST

திருநெல்வேலியில் சி.எஸ்.ஐ. திருமண்டல முன்னாள் லே செயலரை தாக்கிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

நெல்லை சி.எஸ்.ஐ. திருமண்டலத்தின் முன்னாள் லே செயலர் வேதநாயகம். இவர், சனிக்கிழமை இரவு திருநெல்வேலி வேய்ந்தான்குளம் புதிய பஸ் நிலையம் அருகேயுள்ள தனது வீட்டிற்கு முன்னால் அமர்ந்து, நண்பரான பாளையங்கோட்டை பெருமாள்புரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த ஜெ. சாத்துராஜ் சாமுவேல் (38) என்பவருடன் பேசிக் கொண்டிருந்தாராம்.சாத்துராஜ் சாமுவேல் சி.எஸ்.ஐ. திருமணடலத்திற்கு சொந்தமான பள்ளி ஒன்றில் ஓவிய ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அதிகாலை 1.45 மணியளவில் காரில் 4 பேர் அங்கு வந்தனர். அவர்கள் அத்துமீறி வேதநாயகத்தின் வீட்டிற்குள் நுழைந்து முன்னாள் லே செயலர் வேதநாயகம் மற்றும் சாத்துராஜ் சாமுவேல் ஆகிய இருவரையும் தாக்கினராம்.அந்த நபர்கள் இரும்பு கம்பியால் தாக்கியதில் சாத்துராஜ் சாமுவேல் பலத்த காயமடைந்தார். அவர் பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், அந்த நபர்கள் அங்கிருந்த நாற்காலிகள் உள்ளிட்ட பொருள்களையும் அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர்.

இது குறித்து சாத்துராஜ் சாமுவேல் கொடுத்த புகாரின் பேரில் மேலப்பாளையம் போலீஸார் வழக்கு பதிந்து,  பாளையங்கோட்டை ரகுமத்நகரை சேர்ந்த ஞானராஜ் மகன் நோபிள் சாமுவேல் (32), திம்மராஜபுரத்தை சேர்ந்த காந்தி மகன் பிரகாஷ் (28), கைலாசம் மகன் சுப்பையா (29), பாளையங்கோட்டை ரயில்வே பீடர் சாலையை சேர்ந்த ஜான்பில்லர் மகன் ஜேசன் (26) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.திருமண்டல பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் இடமாறுதல் தொடர்பாக இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்ததாம். அதன் காரணமாகவே இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மேலப்பாளையம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.