மக்கள் எதிர்ப்பால் டாஸ்மாக் கடை மூடல்

கடலூர் முதுநகர் சிதம்பரம் சாலையில் மருத்துவமனை, கோயில், திருமண மண்டபம் மறறும் குடியிருப்பு பகுதியின் அருகே டாஸ்மாக் கடை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். டாஸ்மாக் கடையை
Updated on
1 min read

கடலூர் முதுநகரில் மக்கள் எதிர்ப்பால் டாஸ்மாக் கடை மூடப்பட்டுள்ளது.

கடலூர் முதுநகர் சிதம்பரம் சாலையில் மருத்துவமனை, கோயில், திருமண மண்டபம் மறறும் குடியிருப்பு பகுதியின் அருகே டாஸ்மாக் கடை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். டாஸ்மாக் கடையை திறக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி நுகர்வோர் சட்ட விழிப்புணர்வு சேவை மைய நிர்வாகிகள் செய்யது மொஹிதீன், பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் கடலூர் மாவட்ட ஆட்சியர், கலால் உதவி இயக்குநர், டாஸ்மாக் மேலாளர் ஆகியோரிடம் மனு அளித்தனர்.

ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த 2012-ம் ஆண்டு சேவை மையத்தினர் கடலூர் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு நடந்து கொண்டிருக்கும் போது டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதுகுறித்து முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு மனுக்கள் அனுப்பப்பட்டது. இதையடுத்து மக்களை பாதிக்கக்கூடிய டாஸ்மாக் கடையை மூட அரசு உத்தரவிட்டது.

உடனடியாக சம்பந்தப்பட்ட இடத்திலிருந்து டாஸ்மாக் கடை அகற்றப்பட்டது. இதன்மூலம் நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையும் முடிவுக்கு வந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com