தருமபுரியில் நக்சலைட் அமைப்பைச் சேர்ந்த தம்பதி கைது
தருமபுரியில் நக்சலைட் அமைப்பைச் சேர்ந்த தம்பதியர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


தருமபுரியில் நக்சலைட் அமைப்பைச் சேர்ந்த தம்பதியர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வடமாநிலங்களில் மாவோயிஸ்ட்டுகளின் ஆதிக்கம் அதிகரிக்கத் தொடங்கியதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் நக்சலைட் மற்றும் மவோயிடுகளின் நடமாட்டத்தைக் கண்காணித்து தடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நக்சலைட் தடுப்பு போலீசார் மற்றும் மாவட்ட காவல்துறையினர் தீவிர ரோந்து சுற்றி வருகின்றனர்.
தருமபுரியில் வெள்ளிக்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், சந்தேகத்துக்கு இடமாக தருமபுரி அருகே கடயத்தூர் ரயில்வே கரை மேம்பாலம் அருகே வந்து கொண்டிருந்த இருவரைப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அந்த இருவரும் சென்னையை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது.
அவர்கள், துறைசிங் வேலு (52), அவரது மனைவி பாரதி (44) என்பதும், அவர்கள் நக்சலைட் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், வெகு நாட்களாக தேடப்பட்டு வந்த குற்றவாளிகள் என்றும் தெரிய வந்தது. இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...