மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. 153 அடி கொள்ளளவு கொண்ட சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 100 அடியை நெருங்கிறது.
தென்மேற்கு பருவ மழை தொடங்கி பெய்து வருவதால் திருநெல்வேலி மாவட்டத்தில்உள்ள அணைகளின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. 48 அடியாக இருந்த பாபநாசம் அணையின் நீர்மட்டம் கடந்த 2 வாரங்களில் 30 அடி உயர்ந்து இன்று பிற்பகல் நிலவரப்படி 79.00 அடியாக இருந்தது.ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 5 அடி உயர்ந்துள்ளது. அணைக்கு விநாடிக்கு3445.49 கனஅடி வந்து கொண்டிருந்தது. அணையில் 35 மி.மீ மழையும், பாபநாசம் கீழ் அணையில் 4 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.
சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 9 அடி உயர்ந்து 100 அடியை நெருங்கிறது.அணையின் நீர்வரத்து சுமார் 3,000 அடியாக இருந்தது. அணையில் 12 மி.மீ மழை பதிவாகியுள்ளது. மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 70.65 அடியாக இருந்தது.அணையில் 9.4 மி.மீ மழை பெய்துள்ளது.கடனாநதி அணையின் நீர்மட்டம் 4 அடி உயர்ந்து 56.50 அடியாகவும், ராமநதி அணைநீர்மட்டம் 2 அடி உயர்ந்து 66.00 அடியாகவும் இருந்தது. கடனாநதி அணைக்கு விநாடிக்கு 191 கனஅடியும், ராமநதி அணைக்கு விநாடிக்கு 70 கனஅடியும் நீர்வரத்து இருந்தது. கடனாநதி அணையில் 10.4 மி.மீ மழையும், ராமநதி அணையில் 2 மி.மீ மழையும், அம்பாசமுத்திரத்தில் 7.3 மி.மி மழையும்,சேரன்மகாதேவியில் 7 மி.மி மழையும் பதிவாகியுள்ளது.
நீர்பிடிப்பு பகுதியில் நீடித்து வரும் மழையால் மணிமுத்தாறு, பாபநாசம் அகஸ்தியர் அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மணிமுத்தாறு அருவியில் இன்று பகலில் வெள்ளப்பெருக்கு இருந்தது
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

பெட்ரோல் நிலையத்தில் ஊழியரை அரிவாளால் வெட்டிவிட்டு பணப் பையை பறித்துச் சென்ற முகமூடி கொள்ளையர்கள்!

மேகாலயா: வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஊரடங்கு தளர்வு!

ராகுலுடன் சேர்ந்து மற்ற காங்கிரஸ் தலைவர்களும் சீரழிந்துவிட்டனர்! மத்திய அமைச்சர் காட்டம்!

ஊர்ந்து சென்று பதவியைப் பெற்றும் நன்றியில்லை; அவர் பெயரைச் சொல்லக்கூட விருப்பமில்லை! ஓபிஎஸ்
வீடியோக்கள்

Valaipechu Anthanan Interview | விஜய்யிடம் இப்போது மனமாற்றம்.. | TVK Vijay | Vijay Trisha issue
தினமணி வீடியோ செய்தி...

சட்டென்று மாறுது வானிலை பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

"உங்க கனவு நிறைவேறியாச்சு! இனி மக்கள் கனவை நினைவாக்குங்கள்!": MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

மன அழுத்தமா? காரணங்கள் என்ன? மன நலனுக்கு என்ன செய்ய வேண்டும்?
தினமணி வீடியோ செய்தி...

