கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

அரசு அனுமதியின்றி செயல்படும் அலுமினிய பவுடர் தொழிற்சாலையை மூட பொதுமக்கள் கோரிக்கை

விருதுநகர் அருகே அல்லம்பட்டி பாரதி நகரில் பவளம் பி.சுந்தரவேல் என்பவருக்கு சொந்தமான இடம் உள்ளது. இந்த இடத்தைச் சுற்றிலும் பல்வேறு குடியிருப்பு பகுதிகள் நெருக்கடியான நிலையில் இருந்து வருகிறது.

Updated On :17 ஜூன் 2013, 1:42 pm

விருதுநகர் பகுதியில் பட்டாசுக்கு தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் அலுமினியம் பவுடர் தயார் செய்யும் தொழிற்சாலையை அகற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இது குறித்து அல்லம்பட்டி, பாரதி நகர் பொதுமக்கள் சார்பில் எம்.காளீஸ்வரி, ஆட்சியரிடம் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது:

விருதுநகர் அருகே அல்லம்பட்டி பாரதி நகரில் பவளம் பி.சுந்தரவேல் என்பவருக்கு சொந்தமான இடம் உள்ளது. இந்த இடத்தைச் சுற்றிலும் பல்வேறு குடியிருப்பு பகுதிகள் நெருக்கடியான நிலையில் இருந்து வருகிறது. இக்குறிப்பிட்ட இடத்தில் சுந்தரவேல் என்பவரும், திருத்தங்கல்லைச் சேர்ந்த உதயசூரியனும் பட்டாசுகள் தயார் செய்வதற்கு பயன்படும் அலுமினியம் பவுடர் தயார் செய்து வரும் தொழிலை செய்கின்றனர். இதனால், இங்கிருந்து வரும் கந்தகம் கலந்த புகையானது சுற்றுப்புற சூழலை மாசுபடுத்தி மூச்சு திணறல், கண் எரிச்சல் ஆகியவைகளை ஏற்படுத்தி வருகிறது.

மேலும், இரவு நேரங்களில் கேட்டை பூட்டிக் கொண்டு வேலை செய்யும் போது, திடீரென வெடிச்சத்தம் கேட்கிறது. இதனால், இப்பகுதியில் உள்ளவர்கள் நிம்மதியாக தூங்க முடியாத நிலையிருக்கிறது. அதோடு, மழை தண்ணீரிலும் கலந்து பல குடியிருப்புகளில் குடிநீரும் நச்சு தன்மையுடன் வருகிறது. இது குறித்து இப்பகுதி பொதுமக்கள் அனைவரும் திரண்டு சென்று கேட்டாலும், யார் கிட்டேயும் போய் சொல்லுங்க என்னை எதுவும் செய்ய முடியாது என மிரட்டியும் வருகின்கின்றனர்.அதோடு, இக்குறிப்பிட்ட இடத்தில் அலுமினிய பவுடர் தயார் செய்வதற்கு அனுமதி பெறவில்லை. அதனால், மாவட்ட நிர்வாகம் குறிப்பிட்ட இடத்திலிருந்து பவுடர் தயாரிக்கும் தொழிற்சாலையை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாரதி நகர் பொதுமக்கள் சார்பில் எம்.காளிஸ்வாரி ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில் தெரிவித்துள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.