விருதுநகர் மேற்குத் தொடர்ச்சி மலையில் 1000 ஹெக்டேரில் மழை நீ்ர் சேகரிப்பு குட்டைகள் அமைக்க ரூ.1 கோடி ஒதுக்கீடு

விருதுநகர் மாவட்ட மேற்கு மாவட்ட தொடர்ச்சி மலையில் பல்வேறு வகையான புலி, காட்டுப் பன்றிகள், மான்கள் உள்ளிட்ட காட்டு விலங்குகள் அதிகம் உள்ளன.  இவைகளை பாதுகாக்கவும், சுற்றுச்சூழலை
Updated on
1 min read

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சுற்றுப்புற சூழலை பாதுகாக்கும் வகையில் நீர் ஆதார பகுதிகளில் 1000 ஹெக்டேர் சமதள பரப்பளவில் வனத்துறை மூலம் மழை நீர் சேகரிப்பு குட்டைகள் அமைக்க ரூ.1 கோடி அரசு ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளதாக மண்டல வனப்பாதுகாவலர் அஜிஸ்குமார் ஸ்ரீவத்ஸவா தெரிவித்தார்.

விருதுநகர் மாவட்ட மேற்கு மாவட்ட தொடர்ச்சி மலையில் பல்வேறு வகையான புலி, காட்டுப் பன்றிகள், மான்கள் உள்ளிட்ட காட்டு விலங்குகள் அதிகம் உள்ளன.  இவைகளை பாதுகாக்கவும், சுற்றுச்சூழலை மேம்படுத்தவும் நீர் ஆதாரப் பகுதிகளை உருவாக்கும் வகையில் வனத்துறை மூலம் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள்  செயல்படுத்தப்பட்டு வருகிறது.தற்போது, வன விலங்குகள் அனைத்தும் மலைப்பகுதியில் போதிய மழை பெய்யாத நிலையில் நீர் குட்டைகளில் தண்ணீர் இல்லாததாலும், இரை கிடைக்காததாலும் மலை அடிவாரப்பகுதிகளில் உள்ள விளை நிலங்களுக்குள் புகுந்து நாசம் செய்து விடுகிறது. இதுபோன்ற காரணங்களால் விவசாயிகள் பெருமளவு பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், இதுபோன்ற காட்டு விலங்குகளை கட்டுப்படுத்தப்படுத்துவதற்கு வனக்காவலர்களும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறன்றனர். 

எனவே இதுபோன்று விளைநிலங்களை சேதப்படுத்தும் விலங்குகளை கட்டுப்படுத்தும் வகையில் மலைப்பகுதியில் சுற்றுச் சூழலை பாதுகாக்கும் வகையில் மரக்கன்றுகள் மற்றும் நீர் வளர்த்தை உண்டாக்கவும் வனத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் நிகழாண்டில் மேற்கு தொடர்ச்சி மலையில் நீர் ஆதாரப் பகுதிகளில் 1000 ஹெக்டேரில், தலா 250 ஹெக்டேர் பரப்பில் 4 மழை நீர் சேகரிப்பு குட்டைகள் உருவாக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.அதோடு, இக்குட்டைகள் அமைய இருக்கிற பகுதியில் பசுமையான சுற்றுச்சூழலை உருவாக்கும் வகையில் சுற்றிலும், ஒவ்வொரு 250 ஹெக்டேரிலும், தேக்கு, வேம்பு, மூங்கில், நாவல் உள்ளிட்ட பல்வேறு வகையான மரக்கன்றுகளும் நடப்பட இருக்கிறது. இப்பணிகளை மேற்கொள்வதற்காக அரசு ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. அதன் அடிப்படையில் சாப்டூர், தாணிப்பாறை, பிளவக்கல் அணை மற்றும் சேத்தூர் மலைப்பகுதியில் குறிப்பிட்ட இடங்களில் சமதள பரப்புகளை கண்டறிந்து, மழை நீர் சேகரிப்பு குட்டைகள் அமைக்கும் பணி தொடங்க இருப்பதாக மண்டல வனப்பாதுகாவலர் அஜிஸ்குமார் வத்ஸவா தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com