இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

நெல்லை மாவட்ட அணைகளில் போதிய நீர் இருப்பு: கார் சாகுபடிக்கு தண்ணீர் திறப்பதில் தாமதம்

இன்று அணைகளின் நீர்மட்டம் நிலவரம்: பாபநாசம் அணையின்நீர்மட்டம் 3.70 அடி உயர்ந்து 85.20 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு2724.77 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையில் இருந்து குடிநீர்

News image
Updated On :18 ஜூன் 2013, 11:37 am

ஷேக் அப்துல்காதர்

தென்மேற்கு பருவ மழை பெய்து வருவதால் திருநெல்வேலி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இருந்தபோதிலும் கார் பருவ சாகுபடிக்கு அணையில் இருந்து தண்ணீர் திறக்கமுதல்வரின் அறிவிப்புக்காக அதிகாரிகள் காத்திருக்கின்றனர்.

தென்மேற்கு பருவ மழை பெய்து வருவதால் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம், சேர்வலாறு, கடனாநதி, ராமநதி அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது.

இன்று அணைகளின் நீர்மட்டம் நிலவரம்: பாபநாசம் அணையின்நீர்மட்டம் 3.70 அடி உயர்ந்து 85.20 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு2724.77 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக348.50 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையில் 1 மி.மீ மழைபதிவாகியுள்ளது.சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 3.22 அடி உயர்ந்து 107.61 அடியாக இருந்தது.மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 311 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையில்இருந்து குடிநீர் தேவைக்காக தாமிரவருணி ஆற்றில் 200 கனஅடியும்,பெருங்கால் பாசனத்திற்கு 75 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.84 அடி கொள்ளளவு கொண்ட கடனாநதி அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 62.00அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 120 கனஅடி நீர்வரத்து இருந்தது.இதேபோல் 84 அடி கொள்ளளவு கொண்ட ராமநதி அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 71.50 அடியாக இருந்தது.

கடந்த 2012 ம் ஆண்டு பருவ மழை பொய்த்த காரணத்தால் தாமிரவருணி பாசனத்தில்கார் பருவம் சாகுபடி செய்ய முடியாத நிலை உருவானது. வடகிழக்கு பருவ மழைசரிவர பெய்யாத காரணத்தால் இப்பாசனத்தில் பிசான பருவமும் முழுமையாக சாகுபடி செய்யவில்லை.2012 ம் ஆண்டு இதே நாளில் (ஜூன் 18 ம் தேதி) பாபநாசம் அணையின் நீர்மட்டம்22.40 அடியாகவும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 48.72 அடியாகவும்,மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 59.00 அடியாகவும் இருந்தது. தற்போது பருவமழை பெய்து நீடித்து வருவதால் 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணைநீர்மட்டம் 85.20 அடியாகவும், 153 அடி கொள்ளளவு கொண்ட சேர்வலாறு அணை நீர்மட்டம் 107.61 அடியாகவும் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.